Author: தமிழ்மாறன்

ஆண்களைவிட பெண்கள் மூளை சுறுசுறுப்பாக செயல்படும்: புதிய ஆய்வில் தகவல்

ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது. மறதி நோயான ‘அல்சமீர்’ நோய் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 43,034 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுறுசுறுப்பு, ஒரு வி‌ஷயத்தை உற்று நோக்குதல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றின் வெளிப்பாடுகள் பற்றி ஆராயப்பட்டது. அதில் […]

குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரால் 87 பேர் கைது

யாழ். குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதல்களில் இதுவரை 87 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஓகஸ்ட் 4ஆம் நாள் தொடக்கம், ஓகஸ்ட் 7ஆம் நாள் காலை 7 மணி வரை யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய், நெல்லியடி, மானிப்பாய், பருத்தித்துறை காவல் நிலையப் பகுதிகளில், இந்த தேடுதல்கள் நடத்தப்பட்டன. சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி […]

திலக் மாரப்பனவுக்கு பதில் வெளிவிவகார அமைச்சர் பதவி?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க நேற்று விலகியதை அடுத்து, பதில் வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் நிலவுகின்றன. ரவி கருணாநாயக்கவின் பதவி விலகலை அடுத்து வெளிவிவகார அமைச்சர் பதவி வெற்றிடமாக உள்ளது. புதிய வெளிவிவகார அமைச்சர் நியமிக்கப்படும் வரையில், இந்த அமைச்சை சிறிலங்கா அதிபரே கவனித்துக் கொள்வார். அதேவேளை, பதில் வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படுவதற்கு […]

யாழ். குடாநாட்டில் கடற்படை கொமாண்டோக்கள் களமிறக்கம்

யாழ். குடாநாட்டில் கடலோரக் காவல்படைக்கு உதவியாக, சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்களும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்கமைய, கடந்த 7ஆம் நாள் பருத்தித்துறைக்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர், கடற்படை கொமாண்டோக்களின் உதவியுடன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மண் ஏற்றப்பட்ட நிலையில் இருந்த உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டு பருத்தித்துறை […]

தீவக பகுதியில் அதிபர்கள் இன்றி பல பாடசாலைகள்: சிறிதரன்

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக தீவக வலயத்திலுள்ள பல பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றதென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். இன்றைய (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வில், சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதிபர் இல்லாத பாடசாலைகளில் அதிபர்களின் கடமையை நிறைவேற்றும் ஆசிரியர்களுக்கு, மிகைநிரப்பு அதிபர்கள் என பெயரிட்டு அவர்களுக்கு எவ்வித சம்பள உயர்வோ பதவி […]

ஈழத்தின் முதல் பெண் விமானி நாடாளுமன்றிற்கு வருகை!

  ஈழத்தின் முதல் தமிழ் பெண் விமானியான அர்ச்சனா செல்லத்துரை, இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றிற்கு வருகை தந்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கூடியது. இதன் போது நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த அர்ச்சனா செல்லத்துரை, சபை நடவடிக்கைககளை பார்வையிட்டார். இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் […]

புதிய வெளிவிவகார அமைச்சர் யார்? ஐ.தே.க., சு.க இடையே வாக்குவாதம்

புதிய வெளிவிவகார அமைச்சர் குறித்து அரசுக்கு கடும் வாக்குவாதம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சராக இருந்து ரவி கருணாநாயக்க நேற்று தனது பதவியை இராஜனாமா செய்ததையடுத்து குறித்த அமைச்சு பதவியை வெற்றிடமாகியுள்ளது. யாருக்கு அந்த பதவியை வழங்குவது என்று பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றும் அரசால் இறுதி முடிவொன்றை எடுக்க முடியாதுள்ளது. திலக் மாரப்பன தற்காலி வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாளும் தற்போது அந்த நிலைப்பாடு கைவிடப்படுள்ளது. முன்னதாக அமைச்சர்களான […]

வித்தியா கொலை வழக்கு: விஜயகலாவிடம் விசாரணை

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) மாலை பல மணிநேரங்கள் விஜயகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விசாரணை அறிக்கை, எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த வழக்கு விசாரணையின் போது, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். மாணவி வித்தியா கொலையுண்ட […]

தமிழ்நாட்டு போராட்டங்களுக்கு அஞ்சப்போவதில்லை: மஹிந்த அமரவீர

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் தமிழக மீனவர்களையும் தடுத்து வைக்கப்படும் படகுகளையும் விடுவிக்குமாறு தமிழ் நாட்டில் எவ்வித போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அரசாங்கம் தனது கொள்கையிலிருந்து மாறுபடாதென மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாண்டு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால், கடல் வளம் பாதிக்கப்படுவதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்தோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட […]

அரசியல் சாசனத்தில் அடிப்படை கோரிக்கைகள் நிராகரிப்பு: சுரேஸ்

உத்தேச அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரித்துள்ளார். வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி கோரிக்கை என்பன நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் குரல்கொடுத்து வருகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார். யாழில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில், வடக்கு […]