அமெரிக்கா மீது தாக்குதல்: வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமெரிக்காவின் குயாம் தீவு மீது ஏவுகனை தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது நியுஜெர்சியில் உள்ள பெட்மினிஸ்டர் என்ற இடத்தில் தனது விடுமுறையை குடும்பத்துடன் கழித்து வருகிறார். இந்த நிலையில் வடகொரியா மிரட்டல் குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடகொரியாவின் மிரட்டலை எப்படி கையால்வது குறித்து அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதைப்பற்றி பேச வேண்டியதில்லை. நான் மற்ற அதிபர்களை போன்று இல்லை. ஈராக்கின் மொசூலில் 4 மாதங்கள் அமெரிக்க ராணுவம் முகாமிட்டுள்ளது. இது குறித்து நான் எதுவும் பேசவில்லை. ஆனால் அங்கு நடக்கபோவது என்ன என்பதை பார்ப்போம்.

வடகொரியாவை பொறுத்தவரை அதன் நடவடிக்கைக்கு கடும் கோபத்தை அதிகரிக்கும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். அமெரிக்காவையோ அல்லது அதன் நட்புநாடுகளையோ வடகொரியா தாக்க நினைத்தால், நினைத்து பார்க்க முடியாதபடி இழப்புகளை அந்நாடு சந்திக்கும் என்றார்.

டிரம்பின் இத்தகைய கடும் எச்சரிக்கையால் அமெரிக்கா-வடகொரியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவின் குயாம் தீவு மீது வடகொரியா ஏவுகணை வீசினால் அதை நாங்கள் சுட்டு வீழ்த்துவோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இத்தகைய மிரட்டலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *