நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு மீனவர்கள் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக, கடற்படையின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறைக்கு வடக்கே 18 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் இவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய படகு மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றையும் மீட்ட கடற்படையினர், மீனவர்களை யாழ். நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *