டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியானது இந்தியாவிலேயே முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக மருத்துவ மாணவர் என்ற போர்வையில் அங்கு சுற்றிவந்த 19 வயது இளைஞர் அத்னான் குர்ராம் போலீசிடம் சிக்கியுள்ளார். வெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப் சகிதம் தினமும் ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ஆஜராகும் அத்னான் குர்ராம் அனைவரிடமும் தன்னை ஒரு பயிற்சி டாக்டர் என அறிமுகப்படுத்தியுள்ளார். பயிற்சி […]
Author: குமார்
நீதித்துறைக்கு எதிரான நவாஸ் ஷரிப் கருத்துகளை ஒளிபரப்ப லாகூர் ஐகோர்ட் தடை
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எழுந்த ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, 28-7-2017 […]
அமெரிக்க சிறையில் கலவரம்: 7 கைதிகள் படுகொலை
அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 7 கைதிகள் கொள்ளப்பட்டனர் அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் லீசி என்ற இடத்தில் சிறைச்சாலை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சிறையில் உள்ள கைதிகள் 2 பிரிவுகளாகி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. அப்போது சிறையில் குறைந்த அளவே காவலர்கள் […]
ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும்: அரபு நாடுகள் வலியுறுத்தல்
சிரியாவில் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியாவும், ஈரானும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. மேலும் சிரியாவின் ஒரு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டூமா நகரில் கடந்த வாரம் […]
தான்சானியாவில் வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி
தான்சானியா நாட்டின் தலைநகரமான டார் ஏஸ் சலாம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த நகரில் உள்ள வீடுகளிலும், சாலைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையில் நகரில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் […]
அமெரிக்காவில் மாயமான இந்தியர் மற்றும் அவரது மகள் உடல்கள் மீட்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வேலன்சியா நகரில் வசித்து வந்தவர் இந்தியரான சந்தீப் (42). இவர் தனது மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோருடன் காரில் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். ஆனால் அவர்கள் வழியில் மாயமாகினர். கடந்த 6-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இதில் […]
ஊடகம், இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருதுகள் அறிவிப்பு
ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் பெயரில் 1912-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஊடகவியல், இணைய ஊடகம், இலக்கியம் மற்றும் இசையமைப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்காக விருதுகள் வழங்கப்படுகிறது. மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அமெரிக்க ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்கெர், பிரெஸ் டெமோக்ரட், அரிசோனா ரிபப்ளிக், யு.எஸ்.ஏ டுடே, தி சின்சின்னாட்டி என்கொயர், […]
ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் ஆய்வில் தகவல்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் எரிக் பெப் தலைமையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்கள். 135 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு தனிமை, கவலை, மனஅழுத்தம் ஆகிய உணர்வுகள் அதிகமாக இருந்தது. போதைப் பொருளுக்கு ஒருவர் எப்படி படிப்படியாக அடிமையாவாரோ அதே போன்று ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி அதை அதிகம் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது. முதலில் மூளையில் உள்ள நரம்பு […]
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு
ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் என பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, கார்த்தி சிதம்பத்துக்கு முன்ஜாமீன் வழங்கினார். […]
அமெரிக்காவில் சீக்கிய கோவிலில் தகராறு – 4 பேர் காயம்
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியன்போலிஸ் நகரில் சீக்கிய குருத்வாரா உள்ளது. அந்த குருத்வாராவில் தலைவரை தேர்வு செய்வதற்காக ஆலோசனை நேற்று நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். அப்போது தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக மறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். இந்தக் கலவரத்தில் சிக்கி காயம் அடைந்த 4 […]





