Author: குமார்

நைஜீரியா போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். இதனிடையே, நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் போர்னோ மாவட்ட தலைநகரான மைடுகுரி நகரை ஒட்டியுள்ள ஆடமாவா மாநிலத்திற்கு உட்பட்ட […]

பாலியல் வழக்கு விசாரணை: வாடிகன் மூத்த அதிகாரி கோர்ட்டில் ஆஜர்

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான வாடிகனின் 3-வது உயர்ந்த அதிகார மையம், கார்டினல் பெல் (வயது 76) ஆவார். இவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் மூத்த உதவியாளர்களில் ஒருவர். இவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றியபோது, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இந்த குற்றச்சாட்டுகளை கார்டினல் பெல் தொடர்ந்து மறுத்து வருகிறார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அவர் சட்டப்படி சந்திப்பதற்கு வசதியாக விடுமுறையில் செல்வதற்கு கடந்த ஆண்டு போப் ஆண்டவர் […]

பாகிஸ்தானில் ராணுவத்துடனான துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாத இயக்க தலைவர் பலி

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தினர் ஸ்பிளிங்லி, காபு மலைப்பகுதிகளில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினரும், போலீஸ் படையினரும் அந்தப் பகுதிகளை கூட்டாக சென்று சுற்றி வளைத்தனர். எல்லை பாதுகாப்பு படையினரின் வாகனத்தை பார்த்ததுமே பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் பலத்த துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த […]

ராஜமௌலியை நெகிழ வைத்த ஜப்பான் ரசிகர்கள்

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியான ‘பாகுபலி 2’ படத்தை ஜப்பானில் ரசிகர்களுடன் பார்த்து நெகிழ்ந்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்டமான படம் ‘பாகுபலி 2’. இப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வியந்து பார்க்க வைத்தது. சுமார் 1700 கோடி வசூலித்த இந்தப் படம் ஜப்பான் நாட்டில் கடந்த வருடம் […]

பா.ஜ.,வுடன் கைகோர்த்த காங்.,: மிசோரம் மாநிலத்தில் திருப்பம்

எதிரும், புதிருமாக உள்ள, காங்., – பா.ஜ., கட்சிகள், மிசோரம் மாநிலத்தில், சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் அதிகாரத்தை கைப்பற்ற, ஒரே அணியில் கைகோர்த்துள்ளது, அக்கட்சிகளின் மேலிட தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கிழக்கு மாநிலமான, மிசோரமில், முதல்வர், லால்தன்வாலா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. மிசோரம் மாநிலத்தில், சக்மா மாவட்ட மக்களுக்காக, சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில், 1972ல் துவங்கப்பட்டது. இந்த கவுன்சிலுக்கான தேர்தல், ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடப்பது […]

ஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் – வங்கிகளின் ஷாக் திட்டம்

வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஏ.டி.எம். பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் வசூலிப்பது என்று வங்கிகள் திட்டமிட்டுள்ளன. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை வழங்கி வருகிறது. குறைந்த பட்ச பேலன்ஸ், ஏ.டி.எம். பண பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு உள்ளிட்டவற்றை வழங்குகிறது. விரைவில் இந்த இலவச சேவைகளை நிறுத்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன. வங்கிகள் அளிக்கும் சேவைக்கு 5 ஆண்டு முன் தேதியிட்டு வரி வசூலிக்க மத்திய அரசு […]

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கொரியப்போர் 1953-ம் ஆண்டு முடிந்த பின்னர் வட, தென்கொரியாக்கள் இடையே இணக்கமான சூழல் கிடையாது. கொரியப்போர் முடிவுக்கு வந்தபோதும், இரு நாடுகள் இடையே பனிப்போர் பல்லாண்டு காலமாக நீடித்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. அணு ஆயுத […]

ஈரான் அணுத்திட்டம் குறித்து புதிய ஒப்பந்தம்: அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் பேச்சுவார்த்தை

2015 ஆம் ஆண்டு ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், ஈரான் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகளாக கருதப்படும் நாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.அவை, பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் மத்திய கிழக்கில் அதன் பங்கு ஆகியவை அடங்கிய புதிய ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாது என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார். அதற்கான காலக்கெடு மே 12 எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2015ஆம் அண்டு போடப்பட்ட அந்த ஒப்பந்தம் ஏமன், […]

கச்சா எண்ணெய் விலை 20% வரை உயரும்: உலக வங்கி

வாஷிங்டன்: கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை 20 சதவீதம் வரை உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் எண்ணெய் வழங்கலில் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்கும் கட்டுப்பாடு காரணமாக, இந்த ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 65 டாலர் வரை உயரும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் கேபினட் மந்திரி ஆனார்

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்தார். இதில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா (வயது 55) கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவர் 2006-11 காலகட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து உள்ளார். இந்தியரான இவரது தந்தை ராஜா, மூத்த போலீஸ் அதிகாரியாக பணி ஆற்றியவர். இவரது தாயார் […]