Author: குமார்

சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா நைட்டி உடையில் இருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை – டிடிவி தினகரன்

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.அவர் மரணம் அடைந்து 10 மாதங்கள் ஆகியும், இன்னும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன. அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். […]

அடிப்படை உறுப்பினராகவே இல்லாத ஒருவர் பொதுக்குழுவைக் கூட்ட முடியாது – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொதுக்குழுவை கூட்டுவேன் என தினகரன் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அடிப்படை உறுப்பினராகவே இல்லாத ஒருவர் பொதுக்குழுவைக் கூட்ட முடியாது அரசியலை, சினிமா போல நினைக்கிறார் கமல்ஹாசன். டிவிட்டரில் மட்டும் இருந்தால் முதலமைச்சராக முடியாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணைய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். ஜெயலலிதா மரணத்தில் தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. அரசோடு […]

திருச்சி வருமான வரி அலுவலகத்தில் செந்தில்பாலாஜியின் நண்பர் – நிதி நிறுவன ஊழியர்கள் நேரில் ஆஜர்

கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள், ஜவுளி, நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி முதல் முகாமிட்டு தொடர்ந்து 4 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளரான தாரணி சரவணனுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். பல கோடி மதிப்பிலான பினாமி சொத்து குறித்த ஆவணங்கள், ரொக்கப்பணம், […]

அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு நீங்கி விட்டது. இரட்டை இலை சின்னம் விரைவில் மீட்கப்படும் – அமைச்சர் ஆர்.பி. உதயகுமா

மதுரை வண்டியூரில் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:- அ.தி.மு.க.வில் இரு அணிகளும் கருத்து வேறுபாடுகளை அகற்றி இணைந்து விட்டது. இதனால் சீரான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. இதனை சீர்குலைக்கும் நோக்கத்தில் தி.மு.க.வினர் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி வருகிறார்கள். மக்களிடம் பொய்களை பரப்பி வருகிறார்கள். மேலும் பாரதிய […]

வட கொரியா ஆடைகளை வாங்க முற்றிலுமாக தடை – சீனா அதிரடி அறிவிப்பு

வட கொரியா சமீபத்தில் 6-வது அணு ஆயுத பரிசோதனை செய்ததை தொடர்ந்து அமெரிக்கா அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை விதித்தது. அமெரிக்காவை தொடர்ந்து தற்போது சீனாவும் வட கொரியா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. இதன் அடிப்படையில், வட கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைப்பதுடன், வட கொரியா உற்பத்தி செய்யும் ஆடைகளை வாங்க முற்றிலுமாக தடை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. வட கொரியா […]

துருக்கி: கருங்கடலில் அகதிகள் சென்ற படகு விபத்து – 15 பேர் பலி

உள்நாட்டுப்போரில் பாதிக்கப்பட்டு ரோமானியாவை நோக்கி அகதிகள் சென்ற படகானது கருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈராக், ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி ஆபத்தான முறையில் படகுகளில் பயணம் செய்கின்றனர். இதனால், மத்தியதரைக் கடல், கருங்கடல் பகுதிகளில் படகுகள் மூழ்கி அகதிகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், துருக்கி அருகே கருங்கடலில் அகதிகள் சென்ற […]

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி புதிய நடுத்தர இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்

ஈரான் ஏவுகணை சோதனையை நடத்த கூடாது என்றும் மீறி நடத்தினால் அணு ஆயுத ஒப்பந்தத்தினை மீறியதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் இந்த எச்சரிக்கையை மீறி ஈரான் நாடு நேற்று நடுத்தர தொலைவிலுள்ள இலக்கை அடையும் புதிய ரக கோரம்சாஹர் என்ற ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. இதுபற்றிய படக்காட்சி ஒன்றை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஏவுகணை பறந்து சென்றபொழுது எடுக்கப்பட்ட படக்காட்சியும் வெளியிடப்பட்டு […]

மரியா புயல், கடும் சூறாவளியுடன், கரீபியன் தீவு நாடுகளில் கரையை கடக்கும் – அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள மரியா புயல் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை தாக்கியுள்ளது. இந்த புயலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள, ‘மரியா’ புயல், கடும் சூறாவளியுடன், கரீபியன் தீவு நாடுகளில் கரையை கடக்கும் என, அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. கரீபியன் தீவு நாடான, டொமினிகாவை, ‘மரியா’ புயல் தாக்கியதில், அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சூறைக்காற்று வீசியதில், பலர் வீடுகளை […]

துருக்கி நாட்டு ஜனாதிபதியை விமர்சனம் செய்த குற்றத்திற்காக மிஸ் துருக்கி பட்டத்தை இழந்த அழகி

துருக்கி நாட்டில் சில தினங்களுக்கு முன்னர் 2017-ம் ஆண்டின் ‘மிஸ் துருக்கி’ அழகி போட்டி நடந்துள்ளது.இப்போட்டியில் பங்கேற்ற இடிர் எஸென்(18) என்பவர் மிஸ் துருக்கியாக வெற்றி பெற்று மகுடம் சூட்டப்பட்டார். எனினும், பட்டம் அளித்த சில மணி நேரங்களில் மேடையில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.‘மிஸ் துருக்கியாக தேர்வு செய்யப்பட்ட இடிர் எஸெனின் அழகி பட்டம் திரும்ப பெற்றுக்கொள்ளப்படுவதாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேசுகையில், ‘கடந்தாண்டு ஜூலையில் ஜனாதிபதியான எர்டோகனின் […]

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை பாராட்டுகிறேன் – நடிகர் விவேக் டுவிட்டரில் வரவேற்பு

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாகவும், முதல்வராகி மக்களுக்கு சேவை செய்ய தயார் என்றும் அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் அறிவிப் புக்கு நடிகர் விவேக் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல் அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்.வருவது யாராக இருப்பினும், வாழ்த்துவது மரபாக இருப்பினும்,மகுடம் தரிக்க வைப்பது மக்களே! இவ்வாறு கூறியுள்ளார். அரசியலுக்கு […]