சீனா, வட கொரியா போன்ற நாடுகளில் உள்ள நாய்க்கறி உண்ணும் பழக்கம் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் நாய்கறி திருவிழா நடைபெறும் போது ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசு அதை கண்டு கொள்வதில்லை. தற்போது இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் அதிகரித்து […]
Author: மலரவன்
கொதித்தெழுந்த எச்.ராஜா
ஜி.எஸ்.டி பற்றி மெர்சல் படத்தில் நடிகர் விஜய் பேசிய வசனம் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. சிங்கப்பூரில் 7 சதவீத ஜி.எஸ்.டி வரியை வசூலிக்கிறார்கள். ஆனால், அங்கே மருத்துவத்தை இலவசமாக தருகிறார்கள். ஆனால், இந்தியாவில் 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது. எனினும், இங்கு எல்லாவற்றையும் பணம் கொடுத்தே பெறுகிறோம் என மெர்சல் படத்தின் இறுதி காட்சியில் விஜய் வசனம் பேசியுள்ளார். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், மத்திய […]
இலங்கையில் கடித்த நாய்; பிரான்ஸில் உயிரிழந்த சிறுவன்!
இலங்கையில் குட்டி நாய் ஒன்றிடம் கடிவாங்கிய சிறுவன் பிரான்சில் உயிரிழந்தான். கிழக்கு பிரான்ஸ் நகரான ரோனில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பத்து வயதுச் சிறுவன் தன் குடும்ப சகிதம் விடுமுறையைக் கழிக்கவென இலங்கை வந்தான். திக்வெல்லையில் சஞ்சரித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு குட்டி நாய் அவனது காலைப் பதம் பார்த்தது. குட்டி நாய் என்பதால் அது குறித்து அவனது குடும்பத்தினர் பெரிதும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. நாடு திரும்பிய அவன், கடந்த […]
முச்சக்கர வண்டி வாங்க நினைத்தால் முந்திக்கொள்ளுங்கள்!
“நாட்டில் முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் இயங்குகின்றன. வாகன நெரிசலுக்கும் அதிகமான விபத்துக்களுக்கும் முச்சக்கர வண்டிகளே காரணம். இவற்றைத் தடுப்பதற்கான முயற்சியாக, இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி நிதியமைச்சிடம் கேட்டிருக்கிறேன். “மேலும், முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை விதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும். “பொதுப் போக்குவரத்தைச் சீரமைக்கும் வகையில், வெகு விரைவில் மின்சாரப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்பாட்டில் விடப்படும்.” இவ்வாறு […]
65 சதவீத பாலியல் துஷ்பிரயோகங்கள் சுய விருப்பத்துடன் நடப்பவை
கிடைக்கப்பெறும் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளில் 65 சதவீதமானவை பெண்களின் சம்மதத்துடன் நடப்பவை என பொலிஸ் பகுப்பாய்வு புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. அப் புள்ளிவிபர தகவலின் படி 2016 ஆம் ஆண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் மொத்தமாக 2036 ஆகும். இதில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களின் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 350ம், 16 வயதிற்குட்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 1686ம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. 16 வயதிற்குட்பட்ட யுவதிகள் சுய […]
இன்றைய ராசிபலன் 20.10.2017
மேஷம்: பெற்றோரின் சொல்லுக்கு மரியாதை தருவீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள். ரிஷபம்: சுய தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். மிதுனம்: சிறு முயற்சியிலும் பலமடங்கு நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சகோதர வகையில் […]
நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார்!
நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதற்காக நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் கொடுத்துள்ள புகாரில், நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் சரியான ஆராய்ச்சி முடிவு வரும் வரை நிலவேம்பு கசாயத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டாம் என தனது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருத்தால் டெங்கு காய்ச்சலுக்காக […]
பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு
ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன், மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்தை ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதியாக அறிவித்து உள்ளது. ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நெருக்கடியை அடுத்து பாகிஸ்தான் கடந்த ஜனவரியில் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் வீட்டுக்காவலில் அடைந்தது. அப்போது பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். […]
ஓராண்டுக்குப்பிறகு வெளியே வந்தார்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். முரசொலி பவள விழா கண்காட்சி அக்.10 வரை நடைபெற்றது. இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வந்தார். ஒரு ஆண்டாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்காத கருணாநிதி முதல் முறையாக முரசொலி அலுவலகம் வந்து கண்காட்சியை பார்வையிட்டார். கருணாநிதியுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் முரசொலி அலுவலகம் வந்தார். ஓராண்டுக்குப்பிறகு பொதுவெளியில் […]
டெங்கு கொசு புழு உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகளுக்கு அபராதம்..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் பள்ளி மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவன் படிக்கும் பள்ளிக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் லதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி கட்டிடங்களில் மழை நீர் தேங்கியிருந்ததால், பள்ளி நிர்வாகத்தை எச்சரித்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதேபோல, நாமக்கல்லில் டெங்கு கொசு புழு உற்பத்தியாவதற்கு வசதியாக தண்ணீர் தேங்கி கிடந்த இரண்டு […]





