Author: மலரவன்

விஜய் ரசிகை என்பதை நிரூபித்த காயத்ரி ரகுராம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம் தான் ஒரு விஜய் ரசிகை என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது ‘மெர்சல்’ படத்திற்கு எதிரான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து தான் ஒரு விஜய் ரசிகை என்பதை நிரூபணம் செய்துள்ளார். அதிலும் அவர் பதிலடி கொடுத்தது தமிழிக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சல்’ படத்தின் ஜிஎஸ்டி வசனம் குறித்து எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வரும் தமிழிசை செளந்திரராஜனுக்கு […]

அழப்போறான் தமிழனா? ; என்னடா சொல்றீங்க?

இப்படம் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரி குவித்துள்ளது. படம் வெளியான 2 நாட்களில் இப்படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் படம் காப்பி எனவும், மறுபக்கம் படத்தில் இடம் பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. அதன் விளைவாக அந்த காட்சிகள் நீக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது. இந்நிலையில், பொதுவாக அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் […]

தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு உண்டாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!

மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். பொடுகு பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரித்துவிடும். இதனால், தலையின் மேற்பரப்பு தோலில் இறந்துபோன உயிரணுக்கள் செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இதுதான் பொடுகு. பொடுகு இருந்தால், பேன், ஈறு வந்து […]

டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலைச் சாறு ஏற்றது என கூறப்படுவது ஏன்?

டெங்கு காய்ச்சல் இன்றைக்கும் தமிழகத்தில் ஆங்காங்கே இது பரவிக்கொண்டுதான் இருக்கிறது. டெங்கு ஏற்படுத்தும் உயிரிழப்புகளும் உடல் பாதிப்புகளும் மக்கள் மத்தியில் கூடுதல் பயத்தை உருவாக்கி இருக்கின்றன. இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசியோ மருந்துகளோ கிடையாது. சித்த மருத்துவத்தில் நிலவேம்புக் கஷாயமும் ஆடாதொடை நீரும் இதைக் குணப்படுத்துவதாகப் பரிந்துரை செய்கின்றனர். இப்போது இந்த மருத்துவத்தில் பப்பாளியும் சேர்ந்துள்ளது. பப்பாளி இலையில் இருக்கின்ற ஒரு வகை வேதிப்பொருள் டெங்கு கிருமிகளை அழிப்பதாக […]

திருமணமான நடிகருடன் நெருக்கம் காட்டும் இளம் நடிகை??

மலையாள காதல் பட நடிகை தற்போது திருமணமான நடிகருடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடன இயக்குனரின் பெயரை கொண்ட நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து மலையாள படத்தில் நடிக்க துவங்கி பிரபலமான நடிகை அவர். இதன் பிறகு தெலுங்கில் ஒரு படத்தை முடித்த கையோடு, தளபதி பெயரை கொண்ட இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் திருமணமான ஒரு நடிகருடன் மிக நெருங்கி பழகி வருவதாகவும், […]

அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த விஜய் – அஜித் ரசிகர்கள்!!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியானது மெர்சல் திரைப்படம். இந்த படம் பல சாதனைகளை முறியடித்து வருகிறது. படத்தில் மத்திய, மாநில அரசுகளை விளாசியிருக்கிறார் விஜய். மத்திய அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்த வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் போர்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக அஜித் ரசிகர்களும் குரல் கொடுக்க […]

இன்றைய ராசிபலன் 21.10.2017

மேஷம்:சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன் ரிஷபம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். […]

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல் கிடைக்குமா? அற்புதம்மாள் மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சமீபத்தில் பரோல் கிடைத்தது. ஒரு மாதம் கிடைத்த பரோல் கடந்த மாதமே முடிவடைந்தாலும் பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பரோல் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க முதல்வரிடம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் […]

மீண்டும் ஒலிக்கும் கருணாநிதியின் குரல் – திமுகவினர் ஆரவாரம்

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் தன் காந்தக்குரலில் உரையாற்றுவார் என அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் கோபால் தெரிவித்துள்ள விவகாரம் திமுகவினர் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் மற்றும் முதுமை காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் ஓய்வு எடுத்து வருகிறார். அந்நிலையில் நேற்று இரவு திடீரென அவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு சென்றார். முரசொலி பவளவிழாவை […]

மெர்சலில் ஜிஎஸ்டி காட்சிகள் திடீர் நீக்கம்: இன்கம்டாக்ஸ் ரெய்டு பயமா?

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்திற்கு ரிலீசுக்கு முன்பே பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் ரிலீசுக்கு பின்னர் அந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி காட்சியால் மத்திய அரசின் ஆதரவாளர்கள் கொதித்து எழுந்தனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர்கள் படக்குழுவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளர் முரளிராமசாமி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி என்று கூறப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு காட்சிகளை நீக்கிவிடுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் […]