Author: அருள்

திருப்பதியில் மைத்திரி தரிசனம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார். நேற்று பெங்களூர் வழியாக திருப்பதி சென்ற ஜனாதிபதி மைத்திரி, அவரது துணைவியார் ஜயந்தி புஸ்பா குமாரி, மகன் தஹம் சிறிசேன ஆகியோர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தனர். இன்று அதிகாலை அவர்கள் ஏழுமலையான் ஆலயத்தில் சுப்ரபாத சேவையின்போது வழிபாடுகளை மேற்கொண்டனர். இதையடுத்து. அவர்களுக்கு திருப்பதி ஆலயத்தின் சார்பில், நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளால் ஜனாதிபதி கௌரவிக்கப்பட்டு, ஆலய […]

திராவிட முன்னேற்ற கழகத்தின் பக்கம் சாய்கிறதா நடிகர் சங்கம்?

ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்று சினிமா துறைக்கு பிரச்சனை ஏற்படும் போது தன்னை மட்டுமல்ல திமுக சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகரையும் அழைக்க வேண்டும் என நடிகர் சங்கத்தின் துணை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் அச்சங்கத்தின் துணை தலைவர் நடிகர் கருணாஸ் பேசினார். அப்போது, தான் சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கும், அத்தகைய மாயை நடந்ததற்கும் காரணம் தான் நடிகர் சங்கத்தின் துணை […]

தமிழக அரசு மீது தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றச்சாட்டு!

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை போதுமானதாக இல்லை என, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் புகார் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அருகே நிலவேம்பு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சலும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார். கேரள அரசு […]

கணவர் நடராஜனுடன் சசிகலா இரண்டாவது நாளாக சந்திப்பு!

சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா இரண்டாவது நாளாக சந்தித்தார். சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கணவரின் உடல் நிலை கருதி சசிகலாவிற்கு 5 நாள் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த அவர் நேற்று குளோபல் […]

என்னை அப்படி செய்ய சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை- காயத்ரி அதிரடி

Bigg Boss நிகழ்ச்சியில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் ஓவியா. அதே ரசிகர்களால் நிகழ்ச்சியில் மிகவும் மோசமாக வெறுக்கப்பட்டவர் காயத்ரி. இவர்கள் இருவரும் இறுதி நாளில் கூட சரியாக பேசவில்லை. இந்த நிலையில் ஓவியா ரசிகர்கள் காயத்ரியிடம் அவரை பற்றி ஏதாவது கூறுங்கள் என்று நிறைய பேர் டுவிட் செய்தனராம். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காயத்ரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் ஒருவரை விரும்பவும், வெறுக்கவும் நீங்கள் முடிவு செய்ய முடியாது. […]

நான் வெறுப்பது யாரை? ஓவியா ஆர்மி பிடிக்காது? மனம் திறந்த ஓவியா

பிக்பாஸ் முடிந்தாலும் அனைவரும் எதிர்பார்ப்பதும், ரசிப்பதும் ஓவியாவைத்தான். இவருக்கான ரசிகர் கூட்டம் யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நீங்கள் வெறுக்கும் நபர் யார் என்ற கேள்விக்கு நான் யாரையும் வெறுப்பதில்லை. நான் என்னை நேசிப்பதால் அனைவரையும் நேசிக்கிறேன். எனக்கு யாராவது துரோகம் செய்தாலோ, கொலை செய்ய வந்தால் கூட எனது கோபம் அந்த நாளைக்கு மட்டும்தான் இருக்கும். மறுநாள் புதிய நாளாக இருக்கத்தான் விரும்புவேன் என்றார். […]

ஓவியாவை நான் ஏன் வெறுத்தேன்- காயத்ரி கூறும் பதில்

BiggBoss நிகழ்ச்சி மூலம் ஒரு சிலருக்கு மக்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஜுலி, காயத்ரி போன்றோர் இப்போதும் ரசிகர்களால் வெறுக்கப்படுகின்றனர். தொடர்ந்து நிறைய பேட்டிகள் கொடுத்து வரும் காயத்ரி, அண்மையில் ஒரு பேட்டியில் BiggBoss அனுபவம் மற்றும் ஓவியாவை பற்றி கூறியுள்ளார். அதில் அவர், BiggBoss நிகழ்ச்சியில் நான் நீண்ட நாட்கள் இருக்க மாட்டேன் என்று எனது நண்பர்கள் கூறினார்கள். ஆனால் 2 மாதங்கள் நான் எப்படியோ தங்கிவிட்டேன். […]

பிக்பாஸ் குறித்து கேப்டன் விஜயகாந்த் கலக்கல் பதில்

கேப்டன் விஜயகாந்த் தற்போது மீண்டும் பரபரப்பாக பல மீடியாக்களுக்கு பேட்டியளித்து வருகின்றார். இதில் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். இதில் இவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கின்றீர்களா? என்று ஒரு கேள்வியை கேட்க உடனே கேப்டன் ‘பிக்பாஸுன்னா என்ன’ என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பிறகு சில நொடி கழித்து மீண்டும் ‘ஓ கமல் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றாரே அதுவா?, அதெல்லாம் பார்க்க நேரமில்லைப்பா, […]

தனது ரசிகர்களுக்கு ஓவியா வைக்கும் கோரிக்கை

தலைவி, டார்லிங் என பல பட்டப் பெயர்களுக்கு சொந்தக்கார நடிகை ஓவியா. BiggBoss நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து மிகவும் பரபரப்பாக படங்கள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரங்களில் நடிப்பது என பிஸியாக இருக்கிறார். தற்போது ஓவியா ஆர்மி ரசிகர்கள் சிலர் தங்களது தலைவியை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது ஓவியா, ஜுலியை எதுவும் செய்யாதீர்கள், தயவுசெய்து எதுவும் செய்யாதீர்கள் ஓவியா ஆர்மி மக்களே என்று கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வீடியோ தான் […]

அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: விஷால் அதிரடி

நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க பொது செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகிய பதவிகளை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அடுத்த நடிகர் சங்க தேர்தல் பற்றி கேட்கப்பட்டது. அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்திமுடிக்கப்படும் என்றும், அதில் நிச்சயம் நானும் போட்டியிடுவேன் என விஷால் அப்போது தெரிவித்தார்.