Author: அருள்

பிணைமுறி மோசடி விசாரணை: ஐ.தே.க. அமைச்சர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும்!

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் எதுவித தலையீடுகளையும் தம்மால் செய்யமுடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அதனை எதிர்கொண்டேயாக வேண்டுமென்றும், அதில் சமரசத்துக்கே இடமில்லையென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான […]

தாய்வான் வங்கி மோசடி: அரசசார்பற்ற நிறுவனமொன்றும் விசாரணைப்பொறிக்குள்!

தாய்வானில் பிரபல வங்கியொன்றில் கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒருதொகை இலங்கையிலுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ள இணைய மோசடி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. இந்த மோசடியுடன் தொடர்புட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இதனுடன் அரச சார்பற்ற நிறுவனமொன்றும் தொடர்புபட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த அரச சார்பற்ற நிறுவனம் கொள்ளையிடப்பட்ட பணத்தின் ஒருபகுதியை தனது கணக்கில் வைப்பிலிட்டுக் கொண்டுள்ளதாகவும், குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இனிவரும் […]

ஜனாதிபதி

புதிய அரசமைப்புக்கு ஆதரவு திரட்ட சர்வகட்சி கூட்டத்துக்கு மைத்திரி ஏற்பாடு!

அரசமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கைமீது விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் அனைத்துக்கட்சி மாநாடொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளார். ஜேர்மன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. புதிய அரசமைப்புக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும் தீவிர பிரசரங்களை முன்னெடுத்துவருவதுடன், நாட்டைப் பிளவுபடுத்துவதற்காகவே புதிய அரசமைப்பு கொண்டுவரப்படவுள்ளது எனவும் சுட்டிக்காட்டிவருகின்றன. இதனால், […]

புதிய அரசமைப்பு குறித்து ஜயம்பதி, சுமந்திரனிடம் 20இல் கேட்டறிவார் பப்லோ!

இலங்கையின் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பாக அறிந்துகொள்வதில் ஐ.நா. அதிகாரிகளும் ஆர்வம்கொண்டுள்ளனர். அந்தவகையில் நிலைமாறுகால நீதி, சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ஆராய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறிப் எதிர்வரும் 20ஆம் திகதி புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான இடைக்கால அறிக்கை குறித்து கொழும்பில் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். புதிய […]

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வடக்கில் ஹர்த்தால்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணத்தில் முழுமையான ஹர்த்தால் நடைபெறவுள்ளது என அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். இந்தக் ஹர்த்தாலுக்கு பல பொது அமைப்புகளும், சிவில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், வடக்கு […]

உடலுறுப்புகள் செயலிழக்கும் நிலையில் உண்ணாவிரதக் கைதிகள்!

“அநுராதபுரம் தொடர் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடலுறுப்புகள் செயலிழக்கும் நிலையை அடைந்துள்ளன. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மௌனத்தைக் கலைத்து உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய வழக்கை வவுனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்கவேண்டும், அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றக்கூடாது […]

புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து புலம்பெயர் அமைப்புகளுக்கு விளக்கம்!

புதிய அரசமைப்பு குறித்தும் அதன் முக்கியத்துவம் தொடர்பிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு விளக்கமளிக்க அரசு முடிவுசெய்துள்ளது. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சூழலில் அதன் உள்ளடக்கம் குறித்து உள்நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் கருத்தாடல்கள் வலுப்பெற்று வருகின்றன. தெற்கில், நாடு இரண்டாகப் பிளவுபடக் போகின்றது. சமஷ்டியைக் கொண்டுவரப் போகின்றனர் என அரசியல் இலாபத்துக்காக தீவிர இனவாதப் பிரசாரத்தில் மஹிந்த அணியான பொது எதிரணி […]

கோட்டாவைக் கைதுசெய்து ‘ஹீரோ’வாக்க வேண்டாம்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்வதை தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்து நாட்டு மக்கள் மத்தியில் அவரைப் பெரியாளாக்கிவிட வேண்டாம் என்றும், அவரைக் கைதுசெய்வதைத் தடுக்குமாறும் அவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், நீதித்துறையின் சுயாதீன செயற்பாடுகள் மீது தன்னால் தலையிட முடியாது என்றும், அவரைக் […]

புதிய அரசமைப்பில் தமிழருக்கு தீர்வு கிடைக்குமா? – அறிவதில் அமெரிக்கா நாட்டம்

இலங்கையின் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பாக அறிந்துகொள்வதில் அமெரிக்க அதிகாரிகள் ஆர்வம் கொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது. இந்த முயற்சியின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்வதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. அமெரிக்காவுக்கு கடந்த மாத இறுதியில் சபாநாயகர் கரு ஜயசூரியா தலைமையில் குழுவொன்று விஜயம் செய்தது. இதில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சந்திரானி பண்டார, இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான […]

ஒருமித்த தீர்மானம் எடுக்க களமிறங்குகின்றார் சந்திரிகா அம்மையார்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள் மாறுபட்ட நிலைப்பாடுகள் உருவாகியுள்ள நிலையில் அவற்றுக்கு முடிவுகட்டி ஒருமித்த தீர்மானமொன்றை எடுக்க களமிறங்கியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் சு.க வின் சிரேஷ்ட ஆலோசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வெஸ்மினிஸ்டர் எனப்படும் பிரதமர் தலைமையிலான ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்துள்ளது. அதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட நிறைவேற்று […]