Author: அருள்

இலங்கைப் படைகளுடனான பயிற்சி தொடரும்- அமெரிக்கா

அமெரிக்கா: இலங்­கைப் படை­க­ளுக்கு இடை­யி­லான கூட்­டுப் பயிற்சி போன்ற வாய்ப்­பு­கள் இன்­னும் அதி­க­ரிக்­கும் என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. திரு­கோ­ண­ம­லை­யில் கடந்த 2ஆம் திகதி தொடங்கி நேற்­று­டன் முடி­வ­டைந்த, அமெரிக்கா – இலங்கைக் கடற்­ப­டை­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி தொடர்­பாக அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­தினால் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதில் இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் துணைத் தூது­வர் ரொபேர்ட் ஹில்­டன், இலங்கை அரசு நல்­லி­ணக்­கம், நீதி மற்­றும் மனித உரி­மை­கள் போன்­ற­வற்­றில் தொடர்ந்து […]

சசிகலா, தினகரன் இருவரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்- ஓபிஎஸ் தரப்பு

சசிகலாவும், டிடிவி தினகரனும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது டிடிவி தினகரன் அதிமுக உறுப்பினராகக் கூட இல்லை எனவும் தேர்தல் ஆணையத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது ஓபிஎஸ் அணி. அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலைச்சின்னத்தைப் பெற ஈபிஎஸ், ஓபிஎஸ்,தினகரன் ஆகியோரின் தரப்பு தீவிரமாக போராடி வருகிறது. இதற்காக இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மூட்டை மூட்டையாக பிரமாண பத்திரங்களை தாக்கல் […]

Narendra Modi

ஜி.எஸ்.டி வரி மாற்றத்தால் சீக்கிரமே வந்துவிட்டது தீபாவளி: பிரதமர் மோடி

ஜாம்நகர்: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள துர்காதீஷ் கோவிலுக்கு வழிபாடு நடத்த சென்றிருந்தார் பிரதமர் மோடி. இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றிருக்கும் இவர் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்து மக்கள் முன்னிலையில் பேசினார். இதில் அவர் ”ஜி.எஸ்.டி வரி விதி மற்றும் அதில் வந்திருக்கும் மாற்றங்கள் காரணமாக மக்களுக்கு சீக்கிரமே தீபாவளி வந்துவிட்டது” என தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். பிரதமராக மோடி […]

‘கெயில்’ திட்டம் ஸ்டாலின் எச்சரிக்கை

‘மீண்டும் கெயில் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய,- மாநில அரசுகள் முயற்சித்தால், விவசாயிகளுடன் இணைந்து, தி.மு.க., போராடும்’ என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில், விளை நிலங்களுக்கு இடையில், ‘கெயில்’ நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்க, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரிஆகிய, ஏழு மாவட்டங்களில், விளைநிலங்களின் வழியாக, 310 கிலோ மீட்டர் துாரத்துக்கு, 20 மீட்டர் […]

மோடியை திருமணம் செய்ய ராஜஸ்தான் பெண் தர்ணா

புதுடில்லி, பிரதமர் மோடியை திருமணம் செய்வதற்காக, ராஜஸ்தானை சேர்ந்த பெண், டில்லியில், ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர், ஓம் சாந்தி சர்மா, ௪௦. பிரதமர் மோடியை திருமணம் செய்ய விரும்பி, டில்லி ஜந்தர் மந்தரில், ஒரு மாதத்துக்கும் மேலாக, தர்ணா போராட்டம் நடத்திவருகிறார்.இது பற்றி, சாந்தி சர்மா கூறியதாவது: […]

ரைசா ஓவியாவை பற்றி கூறியது தவறு..! ஓவியா அப்படிபட்டவர் இல்லை..!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, அதில் கலந்துகொண்ட அணைத்து பிரபலங்களும் பல வழியில் மக்களை தொடர்புகொள்கிறார்கள். இதில் ரைசா ஒரு ஊடகத்தில் பேசும் போது ‘நான் பிக்பாஸில் சினேகன் தான் வெற்றி பெறுவார் என்று நினைத்தேன், ஏனெனில் அவரிடம் நிறைய தமிழ் உணர்வு இருந்தது. அதை வைத்து அவருக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நினைத்தேன், மேலும், அந்த வீட்டில் யாருடனுமே எனக்கு பிரச்சனை இல்லை. எனக்கு மட்டுமில்லை […]

பிக்பாசை வைத்து கல்லா கட்டும் ஆர்த்தி..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ் முதல் பரிசை வென்றார். அவருக்கு ரூ 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு பரிசு பணம் எதுவும் வழங்கப்படவில்லை. மற்றவர்களுக்கு பரிசு பணம்தான் கிடைக்கவில்லை. மற்றபடி சினிமா வாய்ப்புகள், விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதன் மூலம் பணம் கொட்டி வருகிறது. இதனை பயன்படுத்தி ஆர்த்தி புது வகையில் பணம் பண்ண ஆரம்பித்து விட்டார். அதாவது தன்னை பேட்டி எடுக்க எடுக்க வருபவர்களிடம் […]

ஓவியாவின் மனதை கவர்ந்தது ஆரவ்விற்கு பிறகு இவர் தான் போல..!

இப்போது தேர்தலில் நின்றால் கூட, ஓவியாவை எதிர்த்து நிற்கும் அனைவருக்கும், டிபாசிட் பறிபோவது உறுதி என்ற அளவுக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், அவருக்கு புகழ் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த துவங்கியுள்ளார், அவர். சினிமாவாக இருந்தாலும் சரி, விளம்பரமாக இருந்தாலும் சரி, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி, தன் வீட்டுப் பீரோவை நிரப்பும் வேலைகளில் மும்முரமாக உள்ளார். தற்போது காட்டேரி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதில், பிரபல […]

எனது கோவத்திற்கு காரணம் ஓவியாவே: ரைசா

பிக் பொஸ் வீட்டில் இருந்தவர்களும் வெளியில் ரசிகர்களும் ஓவியாவை இலக்கு வைத்து நடந்து கொண்டமை தனக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக ரைசா தெரிவித்துள்ளார். பிக் பொஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்றுள்ள நிலையில், ரைசா இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். தான் ஒரு மொடல் என்பதால் எப்பொழுதும் சாதாரணமாக இருக்க வேண்டும் என நினைத்து பிக் பொஸ் வீட்டில் அமைதியாக இருந்ததாகவும் இதன்படி, சோறு சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் சசிகலா !!!

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையே தனது கணவரை பார்ப்பதற்காக […]