கண்டி, ஹாரகம ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த சுமார் 200 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக, இன்று காலை கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள், தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னரே, இவ்வாறு திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Loading…
Author: அருள்
தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க! – மைத்திரிக்கு சம்பந்தன் அவசர கடிதம்
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மேலும் தாமதமின்றி உடன் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவசர கடிதம் எழுதியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களின் கோரிக்கை தொடர்பிலும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் […]
தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்: பதிலைத் தந்துவிட்டு யாழ்ப்பாணம் வருக!
“உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நியாயமானவையாகும். அவற்றைப் புறந்தள்ள முடியாது. நாளைமறுதினம் சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு வர இருக்கின்றார். அவர் தனது வருகைக்கு முன்னர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நல்ல ஒரு பதிலைத் தரவேண்டும். பதிலைத் தந்துவிட்டே ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வரவேண்டும். இதுவே யாழ்ப்பாண ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.” – இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட வணிகர் கழகம் தெரிவித்தது. இது தொடர்பில் […]
யாழ்ப்பாணம், மன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியா நுளம்பு!
மன்னார், யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியாவைப் பரப்பும் நுளம்புகள் இனங்காணப்பட்டுள்ளன என்று வவுனியா மாவட்ட சுகாதார மருத்துவ அதிகாரி திருமதி பவானி தெரிவித்தார். மலேரியா நுளம்புகளை முற்றாக ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தலைமன்னாரில் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவைப் பரப்பும் நுளம்புக் குடம்பிகள், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 19 கிணறுகளில் சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. தற்போது அவை வவுனியா […]
ஒருசில சாட்சிகளுக்காக வேறு நீதிமன்றுக்கு வழக்கு மாறுவது சட்டப்படி கண்டனத்துக்குரியது!
“சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்துக்கு மாற்றுவது சட்டப்படி கண்டனத்திற்குரியது. ஒன்றரை இலட்சம் படையினர் வடக்கு மாகாணத்தில் குடிகொண்டிருக்கும்போது சாட்சிகள் பயந்து வரத் தயங்குகின்றார்கள் என்பது நொண்டிச்சாட்டாகவே தென்படுகிறது. சாட்சிகளைப் பொலிஸாரே மன்றுக்குக் கொண்டுவந்து திரும்பவும் கொண்டுபோய் அவர்களது வதிவிடங்களில் சேர்ப்பிக்கமுடியும்.” – இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ‘ஊடகவியலாளர்களின் கேள்விக்கான முதலமைச்சரின் பதில்’ என்ற தலைப்புடன் அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “தமிழ் அரசியல் கைதிகள் […]
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பிலும் நாளை போராட்டம்!
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் கொழும்பிலும் நாளை வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்னால் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இந்தப் போராட்டம் இடம்பெறும் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். Loading…
போர்க்குற்றத்துக்குச் சான்றான முள்ளிவாய்க்காலில் பப்லோ!
நிலைமாறுகால நீதி, சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ஆராய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் விசேடஅறிக்கையாளர் பப்லோ டி கிறிப் இன்று வடக்குக்குச் சென்றார். இதன்போது அவர், இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றமைக்குச் சான்றான இடமான முள்ளிவாய்க்காலுக்கும் சென்று அங்குள்ள தற்போதைய நிலைமைகளைப் பார்வையிட்டார். அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களையும் அவர் சந்தித்துப் பேசினார். அதேவேளை, […]
லைப் எப்படியிருக்கு – ஏக்கத்துடன் ஓவியாவிடம் கேட்ட ஆரவ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிக்கப்பட்ட ஜோடி ஆரவ்- ஓவியா. அதன் பின்னர் ஆரவ் தவிர்த்ததால் ஓவியா தற்கொலை வரை சென்று வெளியேறினார். கடைசியில் ஆரவ் டைட்டிலை வென்றார். ஓவியாவின் ரீச் உச்சத்தை தொட்டது. இந்தவாரம் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பவுள்ளனர். இதன் புரோமோ வெளியானது. இதில் ஆரவ் ஓவியா எதிரே உட்கார்ந்து, வெளியே வந்ததற்கு பிறகு லைப் எப்படியிருக்கு என்று கேட்டார். அதற்கு ஓவியா ரொம்ப நல்லாயிருக்கு என்றார். மாகாபா […]
நீங்கள் பார்க்காத ஓவியாவின் இன்னொரு முகம் இது தான்…
பிக் பாஸ் நிகழ்ச்சி 100 வது நாள் முடிந்தும் கூட இன்னும் ஓவியா புகழ் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது. நாளுக்கு நாள் யாரவது ஓவியாவை புகழ்ந்து கொண்டே தான் இருகிறார்கள். ஆனால் பிக் பாஸில் பங்கேற்ற ஒரு சிலரோ அவரை தவறாக பேசுகிறார்கள். அப்படி பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுயா ஓவியாவை பற்றி என்ன சொல்லுகிறார் தெரியுமா?.. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி அனைவராலும் […]
பிக்பாஸ் சுஜாவால் தங்கைக்கு நேர்ந்த கதி? காரணம் தெரிந்தால் வருத்தப்படுவீங்க?
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சுஜா தன் தங்கைக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், சிலர் அவரின் தங்கையை தவறாக விமர்சனம் செய்துள்ளனர். இது குறித்து சுஜா ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்திருந்தால் விஸ் பண்ணலாம். ரீட்வீட் பண்ணலாம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியதை வைத்து அவரை தவறாக விமர்சனம் செய்வது தவறு. எல்லோருக்கும் உணர்வுகள் உண்டு. எனக்கு உங்கள் அளவிற்கு சரியாக தமிழ் வரவில்லை. என்று கூறினார். […]





