வித்தியா கொலை விவகாரம்: முக்கிய அரசியல்வாதியிடம் விசாரணை

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வித்தியா கொலை வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள், அண்மையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தெரிவித்திருந்த தகவல்களின் பிரகாரம், இவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவி வித்தியா படுகொலை தொடர்பான பிரதான சந்தேகநபரை மக்கள் பிடித்து கட்டிவைத்திருந்த நிலையில், அங்கு சென்ற விஜயகலா அவர்களை விடுவிக்குமாறு கோரியதாக தெரிவிக்கப்படும் ஒலிநாடா ஒன்றும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ஒலிநாடாவில் உள்ள குரல் ராஜாங்க அமைச்சர் விஜயகலாவினுடையது தானா என்பதை உறுதிப்படுத்துமாறு, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் பின்னணியிலேயே விஜயகலாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *