ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர் ஒருவரும், மாவட்ட அமைப்பாளர் ஒருவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து இவர்கள் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளராக வடமேல் மாகாணசபை அமைச்சர் சரத் இலங்க சிங்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளராக வடமேல் மாகாணசபை அமைச்சர் சுசில் குணரத்னவும் அமைப்பாளர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *