பாதுகாப்புச் செயலாளருக்கு புதிய பதவி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, ஜேர்மனுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது குறித்த பதவியில் உள்ள கருணாதிலக அமுனுகம ஓய்வுபெறவுள்ள நிலையில், அந்த இடத்திற்கு கருணாசேன ஹெட்டியாராச்சி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமக்கான புதிய பதவி குறித்து ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர், ஜேர்மன் அரசாங்கம் தமது நியமனத்தை ஏற்றுக்கொண்டதும் பதவியேற்பு இடம்பெறலாமெனக் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *