மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்திய தூதரகம் முற்றுகை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், மீனவர் பிரச்சினை தொடர்பாக அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர் சங்கத்தினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களால் கடல் வளம் அழிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த மீனவர் சங்க பிரதிநிதிகள், அத்துமீறும் இந்திய மீனவர்கள் இலங்கை படையினரால் கைதுசெய்யப்படுவதால், அதற்கு பழிவாங்கும் வகையில் இலங்கை மீனவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்ட அடிப்படையில் தமிழ்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்படுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், இந்திய படையினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் மோடி இலங்கை வரும் நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தி;லும், மீன்பிடி அமைச்சிலும் மகஜர்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *