கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியிலிருந்து மோட்டார் செல்கள் மீட்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் குளத்தை அண்மித்த பகுதியிலிருந்து 17 மோட்டார் செல்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் நபரொருவர் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டார் செல்கள் காணப்படுவதை அவதானித்த அவர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோட்டார் செல்களை மீட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *