வித்தியா கொலை விழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் 12 பேரும் கடும் பாதுகாப்புடன் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற மாணவி வித்தியாவின் கொலைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றபோதும், குற்றவாளிகள் தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *