சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் 13 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

புல்மோட்டை கொடுவகட்டுமலை கடற்பகுதியில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, மூன்று படகுகளையும் தடை செய்யப்பட்ட வலைகளையும் 350 கிலோ நிறை கொண்ட மீன்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் மீட்கப்பட்ட படகுகள், வலைகள் மற்றும் மீன்களையும் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *