கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகளைக் காப்பாற்றியோர் மீது தாக்குதல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வவுனியா – ஓமந்தை, கொம்புவைத்தகுளம் பகுதியில் இரண்டு யானைக் குட்டிகள் உட்பட நான்கு யானைகள் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளன.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 8.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

கொம்புவைத்தகுளம் பகுதியில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் கிடைக்கப்பெற்றது.

இதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும் மாலை 4 மணி ஆனபின்னரும் வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சமுகமளிக்காத காரணத்தால், பொதுமக்களின் உதவியுடன் ஓமந்தை பொலிஸார் சுமார் 5 மணித்தியாலங்களாக போராடி இரண்டு குட்டி யானைகளையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு யானைக்குட்டிகள் மீட்கப்பட்டபோதும், யானைக் குட்டி ஒன்று அவ்விடத்தில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பொதுமக்களையும் தாக்கியுள்ளதுடன் இதன்போது இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனினும் தொடர்ச்சியாக மீட்புப்பணியைத் தொடர முடியாமையினால் இன்று காலை இரண்டு பெரிய யானைகளையும் மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும் இரண்டு யானைகளும் மீட்கப்பட்டபோதிலும், அவை அதிகாரிகளை துரத்தியதால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் யானை ஒன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.​

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *