சிவன் அறக்கட்டளை நிலைத்தின் கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்பணம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சிவன் அறக்கட்டளை நிலைத்தின் கல்வி மேம்பாட்டு பேரவை இன்றைய தினம் யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது கல்வி, விளையாட்டு, கலை ஆகிய துறைகளில் சாதித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான ஊக்குவிப்பு நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு மேற்படி கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கல்வி மேம்பாட்டு பேரவையின் தலைவர் வடமாகாண ஓய்வுநிலை மாகாண கல்வி பணிப்பாளர் வ.செல்வராசா தலமைதாங்கி நடத்தினார்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பொறியியல்துறை விரிவுரையாளர் ச.சு.சிவகுமர் கலந்து கொண்டார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்வி பணி ப்பாளர் செ.உதயகுமார் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிழக்குமாகாணசபை உறுப்பினர் கோவிந்தம் ஜனார்த்தனன் மற்றும் சிவன் அறக்கட்டளை நிலையத்தின் நிறுவுனர் கணேஸ் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ்.மாவட்டத்தின் சகல வலயங்களிலும் கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *