வட.கிழக்கில் காணிவிடுவிப்பு தொடர்பாக கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வட.கிழக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் காணப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெறவுள்ளது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையே நாளையதினம் (திங்கட்கிழமை) இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சந்திப்பில் முப்படையினைச் சேர்ந்த அதிகாரிகளும், அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதுடன் இவற்றுக்கான தீர்வுகளும் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *