உணவு ஒவ்வாமை இறக்காமத்தில் மூவர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அம்பாறை – இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் 600 ற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த புதன்கிழமை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் உயிரிழந்த நிலையில் ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறக்காமம் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வைத்திய சிகிச்சைகளை உடனடியாக வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் ஏனைய பிரதேச வைத்தியசாலைகளில் இருந்து 30ற்கும் மேற்பட்ட வைத்தியர்களும் தாதியர்களும் கொண்டுவரப்பட்டு தற்போது தீவிரமாக நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *