அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த இறுதி உடன்பாடு செய்யப்படவில்லை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சீன நிறுவனத்துக்கும் இடையில் இன்னமும் இறுதி உடன்பாடு ஏற்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் அரசாங்கம் கடுமையான நிதி இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த இழப்புகள் ஈடு செய்யப்பட வேண்டும்.

சீன நிறுவனத்துடனான உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், இறுதி வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.” என்றும்  பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *