வவுனியா வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வேலைவாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஊர்வலமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக எதுவித பதிலும் வழங்கப்படாத நிலையில், இன்றைய தினம் கவனயீர்ப்பு ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் ஒன்றுதிரண்ட பட்டாரிகள், வேலைவாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பேருந்து நிலையத்தின் முன்பாக இடம்பெற்ற போராட்டம் பின்னர் வவுனியா கடை வீதி வழியாக ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த பட்டதாரிகள், எமது பிரதிநிதிகள் எமக்காக குரல்கொடுக்க தாமதம் காட்டுவது ஏன்? எமது பெற்றோரின் கண்ணீர் துடைக்க எமக்கொரு சந்தர்ப்பம் கொடு, பட்டம் பைலில் படம் சுவரில் நாமோ தெருவில் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மாவட்ட செயலகம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் இறுதியில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நா.கமலதாசனிடம் மகஜர் ஒன்றைக் கையளித்த பட்டதாரிகள், தமது கோரிக்கைகள் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *