புலம்பெயர் தமிழரால் யாழ் இசைக்கருவிகள் அன்பளிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ்ப்பாணத்தின் குறியீட்டை பிரதிபலிக்கும் யாழ் இசைக்கருவிகள் இரண்டு புலம்பெயர் தமிழரான கந்தமூர்த்தி கலாரெஜி என்பவரால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது .

யாழ் பொது நூலகத்தில் பிரதம நூலகர் சுகந்தி தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் யாழ் மாநகர ஆணையாளர் பொ.வாகீசனிடம் இந்த யாழ் இசைக்கருவி கையளிக்கப்பட்டது.

இந்த யாழ் இசைக்கருவிகள் யாழ். பொது நூலகத்திற்கும் மற்றொன்று யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் குறியீடாகவும் அடையாளமாகவும் கருதப்படும் யாழ் இசைக்கருவி தற்போதுவரை யாழ்ப்பாணத்தின் எந்த பகுதியிலும் இல்லாத நிலையில் குறித்த இசைக்கருவியை புலம்பெயர் தமிழர் வடிவமைத்து யாழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவரும் தற்போது நோர்வேயில் வசித்துவரும் கந்தமூர்த்தி கலாரெஜி என்பவர் நீண்டகால தேடுதலின் பின்னர் இந்த இரண்டு யாழ் கருவிகளையும் வடிவமைத்து யாழ்ப்பாணம் எடுத்து வந்துள்ளார்.

அழிவுநிலையில் இருக்கும் யாழின் அடையாள இசைக்கருவியை யாழ் பல்கலைக்கழக இசைத்துறையில் பாடமாக இணைக்க தாம் முயற்சித்து வருவதாகவும் கந்தமூர்த்தி கலாரெஜி குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *