நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்தாது அனைவரும் ஒன்றிணைவோம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உறவுகளை இழந்து தவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்தாது, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுடனான சந்திப்பின்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் கவனயீர்ப்பு பேராட்டம் இன்று 37 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது.

இவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்களை வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் அருட்சகோதரிகள் உட்பட குறித்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பலர் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை அலட்சியப்படுத்தாது ஆதரவு வழங்குமாறு அருட்தந்தை ஏ.ஜே.ஜாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதேவைளை கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் ஸ்ரீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட மகனுக்கு என்ன நடந்தது என்று தாயார் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *