கருணாவை கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபர் கைது?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கருணாவை கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபர் கைது?

மஹிந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக செயற்பட்டுவந்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக சகோதர மொழி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் எனவும், மத வழிப்பாட்டிற்காக மட்டக்களப்பிலுள்ள கோவிலுக்கு கருணா கடந்த மாதம் சென்றிருந்த வேளையில், பலவந்தமாக அவர் மீது மோதிய ஒருவர், அவரது கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையிலேயே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites