உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலான முதலாவது தேர்தல் முறைப்பாடு பொலிஸாருக்கு நேற்றுப் பதிவாகியுள்ளது.
ஆரச்சிகட்டுவ பொலிஸ் பிரிவில் இந்த முறைப்பாடு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.
பெயர் பதாகை ஒன்றுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பிலேயே அந்த முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும், சம்பவம் தொடர்பில் ஆரச்சிகட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்





