இனியும் சிறந்ததோர் அமைச்சரவையை முதல்வர் விக்கியால் அமைக்க முடியுமா? – கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன் கேள்வி

சி.சிறிதரன் எம்.பி.

சிறந்ததோர் அமைச்சர் வாரியத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இனி அமைக்க முடியுமா என்பதே தற்போதைய சந்தேகம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

வவுனியா கனகராயன்குளம் புதுக்குளத்தில் தங்கம்மா முதியோர் இல்லம் கலாநிதி முருகர் குணசிங்கத்தால் அமைக்கப்பட்டு திறந்துவைக்கும் நிகழ்விலும், ‘இலங்கைத் தமிழர்’ நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்துக்கான தேர்தலைச் சந்தித்தோம். மக்களுடைய பாரிய பங்களிப்போடு ஒரு சபையை அமைத்தோம். எங்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளோடு உரிமைக்கான இணைந்த பயணத்தையும் அதனூடாகக் கொண்டு செல்கின்றோம்.

2013இல் முதலமைச்சர் தலைமையில், மேலும் நான்கு அமைச்சர்களை உள்ளடக்கி ஓர் அமைச்சர் வாரியத்தை அழைத்தோம். அதுபோன்ற சிறந்ததொரு அமைச்சர் வாரியத்தை இனிப் பெறுபோமா? அது போன்ற பெறுமதியான அமைச்சர் குழுவை முதலமைச்சரால் மீண்டும் உருவாக்கிக்கொள்ள முடியுமா என்ற கேள்விகள் எல்லோர் மத்தியிலும் உள்ளது” – என்றார்.

About பார்த்தீபன்

View all posts by பார்த்தீபன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *