கிழக்கு மாகாணசபையை கலைத்து தேர்தலை நடத்த வேண்டும்: முஹம்மட் நஸீர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிழக்கு மாகாணசபையை அதன் காலம் முடிந்ததும் கலைத்து தேர்தலை நடத்த வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

தோப்பூர் பிரதேசத்தில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரம் கிடைக்காமல் கிழக்கு மாகாணசபையை நீடிக்கும் முடிவினை நல்லாட்சி அரசு எடுத்தமை ஏற்கக்கூடிய வகையில் இல்லை.

அரசு மாகாணசபைகளை நீடிக்கும் காலத்தை 02 வருடமாக்கியுள்ளதாக அறிய முடிகின்றது. எவ்வாறாயினும் சபைகளுக்கு காலம் முடிந்தால் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதே சிறந்தது.

மாகாணசபைகள் பெயருக்கு மாத்திரம் இயங்கக்கூடியவாறு அமையக்கூடாது. அது போல் வெறும் அதிகாரம் அற்ற சபையாக இருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை” என அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *