யாழ். வன்முறைகளுக்கு வடக்கு மாகாண சபையும் பொறுப்பு! – தவராசா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ்.நகரில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அசம்பாவிதங்களுக்கு வடக்கு மாகாண சபையும் பொறுப்புக் கூற வேண்டும் என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

ஒரு சில நபர்களின் வன்முறைச் செயற்பாட்டினை வைத்துக் கொண்டு யாழ்ப்பாண மக்கள் வன்முறையை நோக்கிச் செல்கிறார்கள் என தெற்கில் பிரசாரம் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதே போல் புனர்வாழ்வு பெற்ற ஏறத்தாழ பன்னீராயிரம் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரின் செயற்பாட்டை வைத்துக் கொண்டு, முன்னாள் போராளிகளிற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அரச தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிவருகின்றமை கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *