இன­வா­தத்தை தூண்டும் வகையில் செயற்­பட்ட இருவர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே இன­வா­தத்தைத் தூண்டும் வித­மாக செயற்­பட்­டார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் நாவ­லப்­பிட்­டிய பொலிஸார் இரு­வரை கைது­செய்­துள்­ள­துடன் மேலும் இரு நபர்­களை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்டு வரு­வ­தாக தெரி­வித்­தனர்.

இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது;

நாவ­லப்­பிட்டி நகரில் சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு செல்லும் முச்­சந்­தியில் சில நலன்­வி­ரும்­பிகள் இணைந்து வழி­காட்டி குறி­யீட்­டுடன் கூடிய சுவா­மியின் (சமன்­தெய்யோ) உரு­வப்­படம் அடங்­கிய பதா­கையினை செய்­

தி­ருந்­தனர். அப் பதா­கையினை சில தினங்­க­ளுக்கு முன்னர் விஷ­மிகள் கிழித்து எறிந்­துள்­ளனர். மேற்­கு­றித்த சம்­ப­வத்­தினை இப்­ப­குதி முஸ்­லிம்­களே செய்­துள்­ள­தாக கூறி ஒரு குழு­வினர் வதந்­தியை கிளப்­பி­விட்­ட­துடன் அதற்கு எதி­ராக பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்­றி­னையும் மேற்­கொள்ள ஆயத்­தங்கள் செய்­

தி­ருந்­தனர். இதனால் இப்­ப­கு­தியில் பதற்­ற­மான சூழல் காணப்­பட்­ட­தோடு பொலி­ஸாரும் காவல் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். இதன்­போது, மேற்­படி சம்பவம் தொட ர்­பாக நாவ­லப்­பிட்டிபொலிஸார் மேற்­கொண்ட புலன் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து குறித்த சம்­ப­வத்­தினை பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த நான்கு பேரே நிறைந்த மது வெறியில் தெய்­வத்தின் உருவம் என்­று­கூட தெரி­யாமல் கிழித்து எறிந்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நால்­வரில் இரு­வரை கைது செய்து நாவ­லப்­பிட்டி நீதிமன்ற நீதவான் ஸ்ரீநித் விஜே­சே­கர முன்­னிலையில் கடந்த 7 ஆம் திகதி ஆஜர்­ப்ப­டுத்­தியபோது குறித்த நபர்

களை இன்று வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தும்படியும் நீதிவான் உத்த ரவிட்டார்.

புதுக்குடியிருப்பு சந்தியில் விபத்து; ஆடைத் தொழிலாளர்கள் காயம்!
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த விபத்து , இன்று காலை 6.40 அளவில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு கைற்றாமணி ஆடைத்தொழிற்சாலைக்குச் சொந்தமான வாகனமொன்றும், இராணுவத்திற்குச் சொந்தமான வாகனமொன்றும் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஆடைத்தொழிற்சாலைத் தொழிலாளர்கள், 23பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள், புதுக்குடியிருப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பாக பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *