ஈராக் நில நடுக்கம் பலி எண்ணிக்கை 328

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஏராளமான பொருள்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 328 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரித்து கொண்டே வருகிறது 2500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.

நிலநடுக்கத்தையொட்டி நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடித்தது போன்று நிலநடுக்கத்தின் விளைவுகள் ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

Loading…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *