இலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று மாலை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்குச் சம்பந்தன் இந்தச் சந்திப்பில் விளக்குவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து விலக்கிய ஜனாதிபதி, […]
Tag: சம்பந்தன்
கூட்டமைப்பின் மற்றொரு எம்.பியும் கட்சி தாவ ஆயத்தம்!! அதிர்ச்சியில் சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சி தாவுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிலிருந்து கட்சி தாவிப் பிரதி அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட வியாழேந்திரனுக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினரே, விரைவில் கட்சி தாவக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கனடாவுக்குச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், நாடு திரும்பும் போது, கட்சி தாவக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினரும் அலைபேசியில் கதைத்துள்ளார். கட்சி […]
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்யுங்கள் (படங்கள் இணைப்பு)
ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோவிடம் சம்பந்தன் அழுத்தம் * படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் * காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வடக்கு, கிழக்கில் நிறுவப்பட வேண்டும் * தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைத்திருக்க முடியாது * நல்லிணக்க மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்புவதற்கு ஒரு சிலர் பிரயத்தனம் “நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை […]
கடந்த ஆட்சிக்கால அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது: சம்பந்தன்
கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். அண்மைக்காலமாக தொடரும் சிறுபான்மையினங்களின் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் மதவழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும். கடந்த ஆட்சியில் இந்நிலைமைகள் மிகவும் மோசமாக காணப்பட்டன. […]
இராஜதந்திர முயற்சியில் சம்பந்தன் தோல்வியடைந்தாரா?
இராஜதந்திர முயற்சியில் சம்பந்தன் தோல்வியடைந்தாரா? ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச சமுகத்திலிருந்து மறைக்கப்பட்டு விடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டாரா அல்லது அவரது இராஜதந்திர முயற்சியில் […]





