உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடனும் தாமரை மொட்டு சின்னத்துடனும் இணைந்திருக்கின்றனர். ஆகவே அரசாங்கத்தின் பிரதான தலைவர்கள் இருவரும் …
Read More »ஸ்ரீலங்காவிற்கு எதிராக சதிவலை ; உதய கம்மன்பில
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சர்வதேச நீதிமன்றம் மற்றும் சமஷ்டித் தீர்வுக்கான அரசமைப்பை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற அபாயகரமான உள்நோக்கத்தோடு தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கு இரண்டு வருடக்கால அவகாசம் வழங்கப்பட்டதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். அதேவேளை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பிலான தகவல்களை 8 வருடங்களுக்கும் மேலாக மறைத்த குற்றத்துக்காக …
Read More »காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் இன்றும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்
காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் இன்றும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் முன்னெடுத்துள்ள சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் 11 ஆவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா வீதி …
Read More »ஸ்ரீலங்காவுக்கு படையெடுக்கும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள்
ஸ்ரீலங்காவுக்கு படையெடுக்கும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள் ஸ்ரீலங்காவிற்கு மற்றுமொரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று பயணம் மேற்கொண்டு உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், பீற்றர் ரொஸ்கம் தலைமையிலான நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அமெரிக்க நாடாளுமன்றக் குழு கடந்த 20 ஆம் திகதி ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டது. இந்தக் குழுவினர் ஸ்ரீலங்கா ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரைச் சந்தித்ததுடன், …
Read More »கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம்
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம் ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம், யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை 09 …
Read More »காணாமல் ஆக்கப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு
காணாமல் ஆக்கப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசன சட்டமூலத்தை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. குறித்த சாசனத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு கடந்த ஏழாம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த சட்டமூலம், சட்டமாக ஆக்கப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு …
Read More »விடுதலைப் புலிகளால் மஹிந்தவின் உயிருக்கு அச்சுருத்தல்
விடுதலைப் புலிகளால் மஹிந்தவின் உயிருக்கு அச்சுருத்தல் தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்காவில் மீண்டும் தலைதூக்குவது நிச்சயமே என்று ஒன்றிணைந்த எதிர்கட்சியின் முக்கிய பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் நல்லாட்சி அரசாங்கத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் …
Read More »