யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
Tag: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
நிலைப்பாட்டை வெளியிட்டது த.தே.கூ.
ஐக்கிய தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை எமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அரசாங்கம் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் நாம் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல்நிலைப்பாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைவரங்களின் அடிப்படியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் […]
ஐ.நா. ஆணையாளரின் இறுதி எச்சரிக்கையை மனதார வரவேற்கின்றது கூட்டமைப்பு! – அரசு மந்தப் போக்கில் தொடர்வது மாபெரும் தவறு எனவும் சுட்டிக்காட்டு
இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்றுள்ளது. இனியும் விதண்டாவாதக் கதைகளைப் பேசிக்கொண்டிருக்காமல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுத் தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. “சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது, சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு […]
கூட்டமைப்பின் கோட்டைக்குள் மலரத் துடிக்கிறது மஹிந்த அணி! – வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுடன் பஸில் இரகசியப் பேச்சு
பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கோட்டையாகக் கருதப்படுகின்ற வடக்கு மாகாணத்தில் கால்பதிப்பதற்குரிய முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள மஹிந்த அணி, உள்ளூராட்சி சபைத் தேர்தலை குறிவைத்து அரசியல் வியூகங்களையும் வகுத்துவருகின்றது. இதன்படி வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் உட்பட வடக்கிலுள்ள சுமார் 30இற்கு மேற்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் கொழும்பில் இரகசியப் பேச்சு நடத்தியுள்ளனர். இதன்போது மஹிந்தவுடன் இணைந்து அரசியல் பயணத்தை […]
பொன்சேகா விவகாரம்: நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் கூட்டமைப்பு!
முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மஹிந்த அணியான பொது எதிரணி கொண்டுவந்தால் அதற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கத் தீர்மானித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதியும் பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராகவும் செயற்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸில் நீதிமன்றில் கடந்த வாரம் போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதிக்கட்டப் போரில் ஜெனரல் […]
இறுதிப் போரில் நடந்தது என்ன? நீதிமன்றில் ஆஜராகி உண்மையை அம்பலமாக்குக! – பொன்சேகாவிடம் சம்பந்தன் கோரிக்கை
“இறுதிப் போரில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களிலும், மனிதப் படுகொலைகளிலும் ஈடுபட்டமைக்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்று முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்துள்ளார். எனவே, சரத் பொன்சேகா எவ்வித தயக்கமுமின்றி நீதிமன்றில் ஆஜராகி உண்மையை வெளிப்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை சரத் பொன்சேகாவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊக்குவிக்கும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் […]
புதிய அரசமைப்புக்கு நாடளாவிய ரீதியில் மக்கள் ஆதரவு! – அமெரிக்காவிடம் எடுத்துரைத்தது கூட்டமைப்பு
“புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுவதனால் தாங்கள் தோற்றுப்போனவர்களாகக் கருதுபவர்களே இனவாத சிந்தனைகளைத் தூண்டுபவர்களாகச் செயற்படுகின்றனர். அரசமைப்பு மறுசீரமைப்புத் தொடர்பாக நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையின்படி நாடளாவிய ரீதியில் புதிய அரசமைப்பொன்று தேவை என்று மக்கள் கருதுகின்றனர்.” – இவ்வாறு அமெரிக்காவிடம் எடுத்துரைத்துள்ளது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாருக்கும் பிரதான […]
யாழ்.குடாநாட்டில் தொடரும் கைதுவேட்டையை உடன் நிறுத்துங்கள்! – ஜனாதிபதி, பிரதமரிடம் கூட்டமைப்பு வலியுறுத்து
“யாழ்.குடாநாட்டில் இளைஞர்களைக் குறிவைத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் கைதுவேட்டை சில தினங்களாகத் தொடர்கின்றது. இதனை உடன் நிறுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். “யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இவ்வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தும். அதன்போதும் இந்தக் கோரிக்கையை நாம் நேரில் விடுக்கவுள்ளோம்” எனவும் […]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்கும்: கருணாகரம்
அடுத்த தேர்தலில் கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்படும் 37 ஆசனங்களில் குறைந்தது 15 ஆசனங்களைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்கும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். மட்டக்களப்பு நெல்லிக்காடு முன்பள்ளி சிறார்களின் உடல் திறன் விளையாட்டு விழாவில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்தின் 5 வருட […]
இலங்கை மீது ஐ.நா. உன்னிப்பான கவனம்! – சம்பந்தனிடன் எடுத்துரைத்தார் ஜெப்ரி பெல்ட்மன்
“இலங்கை அரசின் செயற்பாடுகளை ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட்ட ஐ.நா. சமூகமானது உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.” – இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன். “புதிய அரசமைப்பின் உள்ளடக்கமும் உருவாக்கும் நடைமுறைகளும் நீண்டகால அரசியல் தீர்வுக்கு மாத்திரமன்றி, நாட்டின் அபிவிருத்திக்கும் செழிப்புக்கும் மிக அத்தியாவசியமானதாகும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு விஜயம்செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் […]





