மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான பல வீடியோக்கள் டிடிவி தினகரன் வசம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். அவரின் மரணத்தில் தொடர்ந்து பல சந்தேகங்களும், மர்மங்களும் நிலவுகிறது. காரணம், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த வரை அவரின் புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை. தற்போது அவரின் மரணம் குறித்து விசாரணை செய்ய தமிழக […]
Tag: ஜெயலலிதா
ஜெயலலிதா மரணம் பற்றி போலீசில் புகார் அளித்த 302 பேரிடம் விசாரிக்க முடிவு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்து வருவதாகவும், அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும் என்றும் சிலர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனுக்கள் […]
ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் நிறைவடையும் பிரச்சாரம்
ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், அத்தொகுதியைச் சாராதவர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு மேல் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தள்ளிப்போன சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுதினம்(டிசம்பர் 21-ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆளுங்கட்சியான எடப்பாடி அணியினரும், ஆளுங்கட்சியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என […]
இந்த நிலையில்தான் ஜெ. அனுமதிக்கப்பட்டார்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படுக்கை நிலையில்தான் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என அப்போலோ துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேட்டியளித்துள்ளார். மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்டது முதல் அவர் மரணமடைந்தது வரை அனைத்திலுமே மர்மமே நீடிக்கிறது. மருத்துவமனையில் அவரை யாருமே சந்திக்கவில்லை என்பது சந்தேகத்தை அதிகப்படுத்தியது. எனவே, இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. எனவே, ஜெ.வின் மரணம் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் […]
ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் ?
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரது அண்ணன் மகள் தீபா விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமே அவரோடு இருந்தனர். அவர் சிகிச்சை பெற்ற எந்த […]
ஆட்சி அதிகாரம் உங்க கையில இருந்தா நீங்க யார வேணும்னாலும் அடிக்கலாமா?
ஆர்கே நகரில் அதிமுக பிரமுகர் ஒருவர் பண பட்டுவாடாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதை தடுத்த தேர்தல் அதிகாரியை அந்த அதிமுக பிரமுகர் தாக்கியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆர்கே நகருக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஒவ்வொரு கட்சியை சார்ந்த நபர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆர்கே நகரில் […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அவர்கள் இருவரும் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. நீதிபதி ஆறுமுகசாமி நேற்று தனது நேரடி விசாரணையை தொடங்கினார். ஆணையத்தில் முதன்முதலாக பிரமாண […]
ஜெயலலிதா மர்ம மரணம்- 15 பேருக்கு நீதிபதி நோட்டீஸ்
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு 15 பேருக்கு ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விசாரணை தாமதமாகும் என்று கூறப்படுகிறது. போயஸ் கார்டனில் இருந்து இன்று விசாரணை தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நோட்டீஸ் அனுப்பட்டுள்ள 15 பேரும் விளக்கம் அளித்த பின்னரே விசாரணை முறைப்படி தொடங்கும் என்று கூறப்படுகிறது. தற்போது கோவையில் உள்ள நீதியரசர் ஆறுமுகசாமி, புதன்கிழமையன்றே சென்னை திரும்புவார் […]
இரட்டை இலை விவகாரம்..
இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான விசாரணையை வரும் 23ந்தேதி மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் உருவான அணிகளால் இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டது. எதிர் எதிர் துருவங்களாக செயல்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் ஒன்றாக இணைந்து இரட்டை இலையை மீட்க முயற்சித்து வரும் நிலையில், அதிமுக அம்மா அணியின் […]
என்னை கொல்ல சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது தீபா குற்றச்சாட்டு .
என்னை கொல்ல சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று தீபா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களாக எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. என்னை கொல்ல சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. போயஸ் தோட்ட இல்லத்தில் போதிய பாதுகாப்பு இல்லை. தனியாக வருமாறு தீபக் அழைத்தார் தனியாக வர மாட்டேன் என்று மறுத்தேன். தீபக் அழைத்ததாலேயே போயஸ் தோட்ட இல்லம் சென்றேன். வேதா இல்லம் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இதுபோல […]





