ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ”வெளிநாட்டுபங்களிப்புடன் கூடிய போர்க்குற்ற தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. இந்த தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு …
Read More »ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்ற காலவரம்புடன் கூடிய உத்தி – கனடா வலியுறுத்தல்
ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன்இ தெளிவான காலவரம்புடன் கூடிய உத்தி ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கனடா வலி்யுறுத்தியுள்ளது. கனடிய அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை கனடா வரவேற்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடனான சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான ஈடுபாடுகளை …
Read More »இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்ததை நேரில் கண்டேன் : கமலாம்பிகை கந்தசாமி
யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதை நான் கண்டிருக்கின்றேன் என யுத்தத்தின்போது கிளிநொச்சி மருத்துவமனையில் அரச மருந்தாளராக பணியாற்றிய கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண் ஜெனிவாவில் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற உபகுழுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, கிளிநொச்சி வைத்தியசாலையில், நான் அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதை காணமுடிந்தது மருத்துவமனை மீதும் தாக்குதல்கள் …
Read More »ஜெனிவா பரிந்துரைகளை ஏற்கமாட்டோம்- சிறிலங்கா
ஜெனிவா பரிந்துரைகளை ஏற்கமாட்டோம்- 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் முன் மைத்திரி உறுதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று சிறிலங்கா அதிபர் வலியுறுத்திக் கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் கொழும்பு இராணுவ மருத்துவமனை அரங்கில், இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், போர் …
Read More »பண்டாரநாயக்க ஏற்றுக்கொண்ட சமஷ்டி முறையை மைத்திரி எதிர்ப்பது ஏன்
ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா அரசாங்கம், கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னர் யுத்த குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்க முடியாது என தெரிவிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில் யுத்தக் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தமிழ்த் …
Read More »தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை கோரவில்லை
வடக்கின் அடிப்படை வாதிகளே சர்வதேச விசாரணையை கோருகின்றனர் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அரசாங்கம் கூறுவது போன்று உள்ளக விசாரணைக்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்களா என்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். வடக்கிலுள்ள அடிப்படைவாதிகளே சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றனர். சாதாரண பொது மக்கள் அவ்வாறு கூறவில்லை. இலங்கை …
Read More »ஸ்ரீலங்காவிற்கு எதிராக சதிவலை ; உதய கம்மன்பில
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சர்வதேச நீதிமன்றம் மற்றும் சமஷ்டித் தீர்வுக்கான அரசமைப்பை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற அபாயகரமான உள்நோக்கத்தோடு தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கு இரண்டு வருடக்கால அவகாசம் வழங்கப்பட்டதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். அதேவேளை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பிலான தகவல்களை 8 வருடங்களுக்கும் மேலாக மறைத்த குற்றத்துக்காக …
Read More »ஐ.நாவில் இன்று வருகின்றது மனித உரிமை ஆணையரின் அறிக்கை!
ஐ.நாவில் இன்று வருகின்றது மனித உரிமை ஆணையரின் அறிக்கை! இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் இந்த அமர்வில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க வேண்டும். …
Read More »நாளைய ஜெனிவா மாநாட்டுக்கு ஹர்ஷ டி சில்வா தலைமை
நாளைய ஜெனிவா மாநாட்டுக்கு ஹர்ஷ டி சில்வா தலைமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீது நாளை புதன்கிழமை விவாதம் நடைபெறும்போது, அரச தரப்புக் குழுவுக்கு பிரதி வெளிவிவாகர அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமை தாங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் இன்று ஜெனிவா நோக்கி புறப்பட உள்ளார். இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் …
Read More »சமூகத்தில் புறக்கணிக்கப்படும் முன்னாள் பெண் போராளிகள்
சமூகத்தில் புறக்கணிக்கப்படும் முன்னாள் பெண் போராளிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்கள் போராளிகள் இன்று சமுகத்தினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். யுத்ததிற்கு முன்னர் பெண் போராளிகளுக்கு காணப்பட்ட மரியாதை யுத்ததின் பின்னர் மழுங்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்றைய தினம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு விடியலை நோக்கிய …
Read More »