இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, புதுடில்லியில் வைத்து நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் ,டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கையின் […]
Tag: ஜனாதிபதி
ஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இடமளிக்க கூடாது
போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பன்னாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சந்திரிகா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தேர்தல் குறித்த பரப்புரைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது […]
ஜனாதிபதி வேட்பாளாராக விக்னேஸ்வரன்?
தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கலந்துகொண்டிருந்தார், இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் வேட்பாளரை தேடுவதில் சிரமப்படுகின்றீர்கள், ஆனால் வடக்கில் விக்கினேஸ்வரன் தயாராகிவிட்டார் என […]
கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வலுக்கும் எதிர்ப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான குமார வெல்கம விரைவில் தீர்க்கமான அரசியல் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அம்முடிவு கொழும்பு அரசியலில் திருப்புமுனையாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு குமார வெல்கம எம்.பி. போர்க்கொடி தூக்கியிருந்தாலும், கடும் எதிர்ப்பையும்மீறி கோத்தபாயவை களமிறக்கும் தீர்மானத்துக்கு ராஜபக்சக்கள் வந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.குறித்த தீர்மானம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபின்னர், குமார வெல்கம, மஹிந்த அணிக்கு […]
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தொடரும் குழப்பம்
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர் முடிவு செய்தால், பொதுஜன முன்னணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்த அக்கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிறுபான்மையின மக்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்பதால், மைத்திரிபால சிறிசேனவை போட்டியில் நிறுத்த மஹிந்த ராஜபக்ஷ விரும்புவதாக […]
ஜனாதிபதியின் நிகழ்வுக்கு துப்பாக்கி ரவைகளுடன் வந்தவர் கைது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிபுறவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் துப்பாக்கி ரவைகள் சிலவற்றை பணம் வைக்கும் பேர்ஸ் ஒன்றில் எடுத்து வந்திருந்த ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் ஐ.தே.க!
தேசிய அரசாங்கத்தை உருவாக்கி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லையென்றால் ஐ.தே.க உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் வெளியாகும் சிங்கள வார பத்திரிக்கையொன்றே மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய அரசாங்கம் அமைக்கும் விடயத்தில் ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்வதன் ஊடாக அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐ.தே.க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அப்பத்திரிக்கை செய்தி […]
ஜனாதிபதியின் கருத்தை விமர்சிக்க சபாநாயகருக்கு உரிமை இல்லை!
ஜனாதிபதியின் செயற்பாடுகளை சபாநாயகர் விமர்சிக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினருக்கும் விமர்சனங்களை வெளியிட அதிகாரம் உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், சபாநாயகர் என்ற பதவியை வகிக்கும் கரு ஜயசூரிய, ஜனாதிபதியை விமர்சனம் செய்ய முடியாது எனவும் […]
ஜனாதிபதியால் காவற்துறையில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றம்
இலங்கையில் நலனுக்காக அடுத்த சில மாதங்களில் காவற்துறை மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு
நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஜனவரி 15 முதல் 2018 டிசம்பர் 31 வரை நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவின் பிரகாரம் இந்த ஆணைக்குழு இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த ஆணைக்குழுவிற்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு சரோஜினி வீரவர்தன, […]





