ஜனாதிபதியின் செயற்பாடுகளை சபாநாயகர் விமர்சிக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வார இறுதி பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினருக்கும் விமர்சனங்களை வெளியிட அதிகாரம் உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், சபாநாயகர் என்ற பதவியை வகிக்கும் கரு ஜயசூரிய, ஜனாதிபதியை விமர்சனம் செய்ய முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கரு ஜயசூரியவின் இந்த செயற்பாடு காரணமாக உன்னதமான நாடாளுமன்றின் சபாநாயகர் பதவி மலினப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் அமைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து குறித்து சபாநாயகர் அண்மையில் நாடாளுமன்றில் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





