Tag: சீனா

இலங்கையை ஒருபோதும் பாதுகாப்புத்தளமாக சீனா பயன்படுத்தாது: சீன தூதுவர்

இலங்கையை தாம் ஒருபோதும் பாதுகாப்புத் தளமாக பயன்படுத்தப் போவதில்லை என இலங்கைக்கான சீன தூதுவர் Yi Xianliang தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அபிவிருத்திக்காக சீனா தனது உதவிகளைத் தொடர்ந்து வழங்கும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் சீனா இலங்கையில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்பதை அவதானித்தால் இதனை அறிய முடியும் என்றும் கூறினார். இலங்கையில் சீன […]

மெட்ரோ ரெயிலுக்காக சீனா பூமிக்கு அடியில் 31 மாடி ரெயில் நிலையம் கட்டுகிறது

சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்தில் பூமிக்கு அடியில் 94 மீட்டர் உயரத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு 31 அடிக்கு மாடிகள் கட்டப்படுகிறது. ரெயில் போக்குவரத்தில் சீனா அதிவேகமாக முன்னேறி வருகிறது. புல்லட் ரெயில், சுரங்க பாதை ரெயில், பறக்கும் ரெயில் என சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ சுரங்க பாதை ரெயிலில் பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் பல அடுக்குமாடி […]

நேரடி பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க வேண்டும்: இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

இந்தியாவும் சீனாவும் நேரடி பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பதற்றத்தை தணிக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப் பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு […]

கட்சி உறுப்பினர்கள் மத நம்பிக்கையை கைவிட வேண்டும்-சீன கம்யூனிஸ்ட் கட்சி உத்தரவு

சீனாவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தனது உறுப்பினர்களை மத நம்பிக்கையை கைவிடுமாறு உத்தரவிட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. சீனாவின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி கடந்த சனிக்கிழமை குயுஷி பத்திரிக்கையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அக்கட்சியின் விதிமுறைகளை பற்றி கூறப்பட்டிருந்தது. இது குறித்து அக்கட்சியின் உறுப்பினர் வாங் சுயான் கூறுகையில், கட்சி உறுப்பினர்கள் கட்சியின் நலனிற்காக தங்கள் மத […]

பாண்டா வடிவத்தில் ராட்சத சோலார் பண்ணை அமைக்கும் சீனா

சீனாவின் மிகப்பெரிய சோலார் நிறுவனம், வேடிக்கையாக ராட்சத பாண்டா வடிவத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் சூரிய மின்சக்தி பண்ணையை அமைத்துள்ளது. புவி வெப்பமாயதலை தடுக்க அனைத்து நாடுகளும் அனல்மின் நிலையும், அணுமின் நிலையத்தில் இருந்து சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையாக சோலார் மின்திட்டத்திற்கு மாறி வருகின்றன. அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பயன்படுத்துவதால் அதில் இதிருந்து வெளிப்படும் கார்பன் வாயு புவியை வெப்பமடையச் செய்கிறது. அதேபோல்தான் அணுமின் நிலையத்தில் […]

தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்: ஆத்திரமூட்டல் செயல் என சீனா கருத்து

தென் சீனக் கடல் பகுதிக்குள் அமெரிக்கா தனது கடற்படையின் போர்க் கப்பலை அனுப்பியுள்ள நிலையில், இது ஆத்திரமூட்டும் நடவடிக்கை என சீனா கருத்து தெரிவித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. மேலும் இப்பகுதியின் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் உரிமை கோரி வந்தன. இந்த […]

மூன்று கடற்கொள்ளையர்களை சீனா சோமாலியா அதிகாரிகளிடம் ஒப்படைத்தது

சந்தேகத்திற்கிடமான மூன்று கடற்கொள்ளையர்களை சோமாலிய அதிகாரிகளிடம் சீனா ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சீனா கடற்படையைச் சேர்ந்த கப்பலில் இருந்து மூன்று கடற்கொள்ளையர்களை சோமாலிய அதிகாரிகளிடம் சீனா ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஏப்ரலில் OS35 எனும் துவாலோ கொடியுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை கொள்ளையடிக்க முயன்றதாக மூன்று கடற்கொள்ளையர்களை சீன கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர். இதன் மூலம் கொள்ளையர்களின் திருட்டு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 2011 ஆம் […]

சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்க மாட்டோம்: வடகொரியா

அணு ஆயுத சோதனை விவகாரத்தில் வடகொரியா, சீனா இடையே மோதல் போக்கு வெடித்துள்ளது. சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்கமாட்டோம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது. வட கொரியா தொடர்ந்து நடத்தும் அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இதனால் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க அரசு பல்வேறு பொருளாதார தடைகளை அவ்வவ்போது கொண்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க […]

சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் – நாட்டுக்கு அர்ப்பணிப்பு

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. உலகளவில் சீனாவின் படை பலம் அபாரமானது. ஆண்டுதோறும் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்மூலம் ஆயுதக்குவிப்பிலும் ஈடுபட்டுள்ளது. சீனாவிடம் ‘சி.என்.எஸ். லயனிங்’ என்ற விமானம்தாங்கி போர்க்கப்பல் மட்டும் இருந்து வந்தது. அதுவும் கூட மிகப்பழையது. 25 ஆண்டுகளுக்கு முந்தையது. பழைய சோவித் […]

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களுக்கு தனிப்பெயரை அறிவித்து மீண்டும் சீனா அடாவடி நடவடிக்கை

அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு தீபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில், திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லமா அண்மையில் அருணாச்சல பிரதேசம் சென்றார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், சீனாவின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா தலாய்லாமா பயணத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதனால், இந்தியா மீது சீனா கடும் […]