காணிப் பிரச்சினை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் வெளிநடப்புச் செய்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம், இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வருகின்றது. இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் …
Read More »விரைவில் விக்கியுடன் பேசிச் சுமுகமான தீர்வு! – வடக்கு மாகாண சபை விவகாரத்தை ஊதிப் பெருப்பிக்கக்கூடாது என்கிறார் சம்பந்தன்
“வடக்கு மாகாண சபை விவகாரம் ஊதிப் பெருப்பிக்கப்படக்கூடாது. இதற்கு விரைவில் முடிவு கட்டப்படவேண்டும்; சுமுகமான தீர்வு காணப்படவேண்டும். இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரை எப்போது சந்தித்துப் பேசுவது என்று இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், விரைவில் சந்திப்பு நடக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை விவகாரம் தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் எப்போது நேரடிச் சந்திப்பு நடைபெறும் …
Read More »வடக்கு அமைச்சர்கள் விவகாரம் மீள் பரிசீலனை
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவரை தொடர்ந்து பணியில் அமர்த்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக, தான் நடவடிக்கை எடுப்பதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ். ஆயருடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபையில் வெடித்துள்ள பிரச்சினையை சமரசமாக தீர்க்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ள சமய தலைவர்கள், இன்று (திங்கட்கிழமை) காலை வடக்கு …
Read More »என்னை பதவியிலிருந்து நீக்கும் சதித்திட்டம் கொழும்பிலேயே தீட்டப்பட்டது : சி.வி
என்னை பதவியிலிருந்து நீக்கும் சதித்திட்டம் கொழும்பிலேயே தீட்டப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். வடமாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து அகற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிக்கும் வகையிலும் இன்று குடா நாட்டில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது. இந்த பேரணி முதலமைச்சரின் இல்லத்தை அடைந்த போது பேரணி முன்னிலையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தான் வடமாகாண முதலமைச்சர் பதிவியில் நீடிக்க போவதில்லை என்பதை அரசாங்கத்தின் …
Read More »வடக்கின் 4 அமைச்சர்களையும் ஒரேயடியாக நீக்கினால் விக்கியும் தனது அமைச்சு பொறுப்புகளை துறக்கவேண்டும்! – மாவை வலியுறுத்து
“வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். வரம்பு மீறிச் செயற்படும் அவரின் இந்த நடவடிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கிணங்க குற்றவாளிகளான இரு அமைச்சர்களை மட்டும் அவர் பதவிநீக்கம் செய்து புதியவர்களை நியமிக்கவேண்டும். இதைவிடுத்து குற்றவாளிகளுடன் நிரபராதிகளான அமைச்சர்களையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாற்றினால் அவரும் தனது அமைச்சுப் பொறுப்புக்களை உடன் துறக்கவேண்டும். புதியவர்களை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் …
Read More »வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: விக்கியுடன் சம்பந்தன் தொலைபேசியில் பேச்சு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ள நிலையில், அவருடன் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று தொலைபேசியில் திடீரென உரையாடியுள்ளார். இந்த அவசர உரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த உரையாடலின்போது வரம்பு மீறிய வடக்கு …
Read More »அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் தீவிர ஆலோசனை – முடிவை நாளை அறிவிப்பார்?
தம்மால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் இரண்டு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவரின் குற்றச்சாட்டுகள் விசாரணைக் குழு உறுதிப்படுத்தியிருந்தது. ஏனைய இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, ஈபிஆர்எல்எவ், புளொட், …
Read More »வடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு: இறுதி அறிக்கை தயார்
வட. மாகாண அமைச்சர்கள் மீதான முறைகேட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்துவந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட. மாகாண சபையின் 93ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. அதன்போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். சபை அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர், வட. மாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுகள் குறித்து …
Read More »இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது : ஜனாதிபதி திட்டவட்டம்
இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில் அமைச்சர்கள், சட்டமா அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். குறித்த சந்திப்பில் காணாமல் போனோர் தொடர்பாகவும், இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாகவும், …
Read More »பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்தால் மக்களின் மனநிலை உக்கிரமடையும்: சி.வி.
பொறுப்புக்கூறலை தட்டிக் கழித்து வருவதால் மக்களின் மனவருத்தங்கள் மேலும் உக்கிரமடையும் என்பதற்கு வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் ஒரு சிறந்த உதாரணமாகும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரது உறவுகளின் வடக்கு- கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வெளியிடும் வகையில் வட. மாகாண சபையில் முதலமைச்சர் இன்று (வியாழக்கிழமை) ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த …
Read More »