காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி அவர்களின் உறவினர்களின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் 47 நாட்களை எட்டியுள்ள நிலையில் தமது போராட்ட வடிவத்தை மாற்றுவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர். மாவட்ட மட்டத்தில் அரச நிர்வாகக் கட்டமைப்புகளை முடக்கிப் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் …
Read More »நீதி வேண்டி தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது உறவுகளின் அறவழிப் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி அவர்களின் உறவுகளின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்கின்றன. வடக்கில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 44ஆவது நாளாகவும் தொடர்கின்றது. தீர்க்கமான முடிவு கிடைக்கும் வரையில் போராட்டக் களத்தில் இருந்து அகலப் போவதில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். வவுனியா நகரில் காணாமல்போனோரின் உறவுகள், இன்று 40 ஆவது நாளாகவும் …
Read More »தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம்!
காணாமல்போனோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 40ஆவது நாளாகவும் தொடர்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலிறுத்தி உறவினர்கள் தமிழர் தாயகத்தில் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்தப் போராட்டம் வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களில் இன்றும் தொடர்கின்றது. “உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. எம்மை வீதியில் விட்டு வேடிக்கை பார்ப்பதை விடுத்து தீர்வைப் பெற்றுத் தரவேண்டும்” என்று காணாமல்போனோரின் உறவினர்கள் கூறியுள்ளனர். …
Read More »எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஐ.நாவும் அரசும் பதில் கூற நேரிடும்! – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எச்சரிக்கை
“காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஐ.நாவும் இலங்கை அரசுமே முழுப் பொறுப்பு.” – இவ்வாறு தமிழர் தாயகத்தில் அறவழியில் தொடர்ந்து போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்தனர். கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறும், அவர்களுடைய உண்மையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி தமிழர் தாயகத்தில் பரவலாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் …
Read More »காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன் “இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் – சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொறுப்புக்கூறவேண்டியவர். அதிலிருந்து தப்பிப்பதற்காகவே சரணடைந்தவர்களைக் கண்டவர்கள் எவருமில்லை என்று கதை சொல்கின்றார்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போரின் இறுதிக்கட்டத்தில் …
Read More »காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரி வடக்கில் ஆர்ப்பாட்டங்கள்!
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரி வடக்கில் ஆர்ப்பாட்டங்கள்! காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மன்னார் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குப் பகிரங்க வேண்டுகோளை முன்வைக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் …
Read More »காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி வடக்கு, கிழக்கில் தொடர்கின்றன அறவழிப் போராட்டங்கள்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி வடக்கு, கிழக்கில் தொடர்கின்றன அறவழிப் போராட்டங்கள்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 5 மாவட்டங்களில் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் தீர்வு கிடைக்காமல் தொடர்கின்றன. வடக்கின் 4 மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலை மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலிறுத்தியே அவர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். “எமக்கு உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. எம்மை வீதியில் விட்டு வேடிக்கை …
Read More »தாய்மார்களின் கண்ணீருக்குப் பதில் என்ன ?
தாய்மார்களின் கண்ணீருக்குப் பதில் என்ன ? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி வேண்டி வவுனியாவில் முன்னெடுத்துவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் சளைக்காமல் தொடர்கின்றது. நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியில் இறங்கிக் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். “ஜ.நாவே கால அவகாசம் நீடிப்பு வழங்கி காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் துரோகம் இழைக்காதே!”, “கடத்தியவர்களைக் காப்பாற்றவா காலநீடிப்பு?”, “தெருவில் இருக்கும் தாய்மார்களின் கண்ணீருக்குப் பதில் என்ன?” போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு …
Read More »காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி மருதங்கேணியிலும் கவனயீர்ப்புப் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி மருதங்கேணியிலும் கவனயீர்ப்புப் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினது போராட்டம் வடக்கில் ஏற்கனவே 3 மாவட்டங்களில் தொடரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் மருதங்கேணியில் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக உள்ள மரம் ஒன்றின் கீழ் நேற்றுப் புதன்கிழமை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய பதில் வழங்க வேண்டும், அவர்களை மீண்டும் …
Read More »