மரண தண்டனையை ரத்து செய்யுமாறு இலங்கையை பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.உலகளாவிய ரீதியில் மரண தண்டனையை இடைநிறுத்துவதற்கான ஐ.நா. தீர்மானத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்த நாடு என்ற வகையில் இதனை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் இதனை வலியுறுத்தியுள்ளார். மேலும், மரண தண்டனை தொடர்பான பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. எனவே […]
Tag: இலங்கை
இலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்
அரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய கட்சியிலான அரசாங்கத்திலே தொடர்ச்சியாக ஊடகத்துறைக்கு எதிரான செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெயர் குறிப்பிட்டு ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை முறையற்ற செயற்பாடாகும். என பொதுஜன பெரமுன முன்னணியின் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு […]
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 184.3 ரூபாயாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் கொள்வனவு விலை 180.6 ரூபாயாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் டொலருக்கான கேள்வி அதிகரித்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக துறைசார் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களா?
சபாநாயகர் இன்னும் தன்னை பதவியில் இருந்து நீக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவர் வகித்து வருவதாக கருத வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ […]
இலங்கை அதிபராகும் கோத்தாவின் கனவு…!
டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நம்பப்படும் கோத்தாபய ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட மேல்நீதிமன்றுக்குச் சென்றிருந்தார். அங்கு, கோத்தாபய ராஜபக்சவிடம் ‘மகிந்த தங்களை அடுத்த அதிபர் வேட்பாளராகக் களமிறக்காது, தங்களின் சகோதரரான பசில் ராஜபக்சவை அடுத்த அதிபர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது’ என ஊடகங்கள் கேள்வியெழுப்பின. ‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை […]
அரசாங்கத்துடன் அமைச்சர் சம்பிக்க கருத்து மோதல்
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைகளை நீக்கிக் கொள்வதற்கு இராஜதந்திர ரீதியிலான முன்னெடுப்புக்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என மாநகர மற்றம் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கருத்தை அமைச்சர் முன்வைத்துள்ளார். இதுவல்லாமல், காணாமல் போனோர் ஆணைக்குழு, காணாமல் போனோர் செயலகங்கள், இழப்புக்களுக்கான நஷ்டஈடு வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மூலமாக […]
ரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன!
இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது தனது இந்திய விஜயம் குறித்து பிரதமர் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள […]
இராணுவ அதிகாரி விவகாரம்? கடுப்பில் கோத்தபாய
யுத்த வெற்றிக்காரணமான இராணுவ தளபதியொருவரை மாலியிலிருந்து திருப்பி அழைக்கவேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளமை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில்கூட இலங்கையால் ஐநாவின் அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு இராணுவத்தினரை அனுப்ப முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது அவ்வாறான நிலையில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் ஆதரவு இலங்கைக்கு உள்ளதென்றால் […]
ஐ.நா திருப்பியனுப்பிய இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்பட வில்லை
ஐக்கிய நாடுகள் அமைதிக்காக்கும் படையணியிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ள இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்படவில்லை என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி போர் குற்றச்சாட்டுகளுக்குள்ளனவர் என்பதாலேயே திருப்பி அனுப்பியதாக ஐ.நா பொதுச்செயளாலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைதி காக்கும் படையில் மாலியில் பணியாற்றிய லெப்.கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுர […]
கர்நாடக இசை கச்சேரியில் இலங்கை உலக சாதனை
40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்து நம்நாட்டுக்கு பெருமை சேர்த்த திரு ஆரூரன் அருனந்தி அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.





