Monday , June 17 2024
Home / Tag Archives: இலங்கை (page 4)

Tag Archives: இலங்கை

இலங்கை அதிபராகும் கோத்தாவின் கனவு…!

இரகசிய இராணுவக் கொலைக் குழுவை

டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நம்பப்படும் கோத்தாபய ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட மேல்நீதிமன்றுக்குச் சென்றிருந்தார். அங்கு, கோத்தாபய ராஜபக்சவிடம் ‘மகிந்த தங்களை அடுத்த அதிபர் வேட்பாளராகக் களமிறக்காது, தங்களின் சகோதரரான பசில் ராஜபக்சவை அடுத்த அதிபர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது’ என ஊடகங்கள் கேள்வியெழுப்பின. ‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை …

Read More »

அரசாங்கத்துடன் அமைச்சர் சம்பிக்க கருத்து மோதல்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைகளை நீக்கிக் கொள்வதற்கு இராஜதந்திர ரீதியிலான முன்னெடுப்புக்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என மாநகர மற்றம் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கருத்தை அமைச்சர் முன்வைத்துள்ளார். இதுவல்லாமல், காணாமல் போனோர் ஆணைக்குழு, காணாமல் போனோர் செயலகங்கள், இழப்புக்களுக்கான நஷ்டஈடு வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மூலமாக …

Read More »

ரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன!

இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது தனது இந்திய விஜயம் குறித்து பிரதமர் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள …

Read More »

இராணுவ அதிகாரி விவகாரம்? கடுப்பில் கோத்தபாய

Gotabaya Rajapaksa

யுத்த வெற்றிக்காரணமான இராணுவ தளபதியொருவரை மாலியிலிருந்து திருப்பி அழைக்கவேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளமை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில்கூட இலங்கையால் ஐநாவின் அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு இராணுவத்தினரை அனுப்ப முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது அவ்வாறான நிலையில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் ஆதரவு இலங்கைக்கு உள்ளதென்றால் …

Read More »

ஐ.நா திருப்பியனுப்பிய இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்பட வில்லை

ஐக்கிய நாடுகள் அமைதிக்காக்கும் படையணியிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ள இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்படவில்லை என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி போர் குற்றச்சாட்டுகளுக்குள்ளனவர் என்பதாலேயே திருப்பி அனுப்பியதாக ஐ.நா பொதுச்செயளாலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைதி காக்கும் படையில் மாலியில் பணியாற்றிய லெப்.கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுர …

Read More »

கர்நாடக இசை கச்சேரியில் இலங்கை உலக சாதனை

கர்நாடக இசை கச்சேரியில்

40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்து நம்நாட்டுக்கு பெருமை சேர்த்த திரு ஆரூரன் அருனந்தி அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

Read More »

சித்திரவதைகள் -தொடரும் நாடுகள் பட்டியலில் -இலங்கைக்கு மீண்டும் முதலிடம்

உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும், துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்று , சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளும் பன்னாட்டு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய இலங்கை ஏழாவது ஆண்டாகவும் (2017ஆம் ஆண்டு புள்ளிவிபரங்கள்) இந்தப் பட்டியலில் முன்னணியில் திகழ்கின்றது. தேசிய அரசு ஆட்சி பீடம் ஏறி மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் இன்னமும் இலங்கையில் மிகவும் கொடூரமான …

Read More »

ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு!!

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார். அதன்படி இந்த வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சு கடந்த வாரம் …

Read More »

ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலி

இலங்கையில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் உள்ள ஹொரானா நகரில் இருக்கும் ரப்பர் தொழற்சாலையில் பணியாளர் ஒருவர் அம்மோனியா வாயுவை சேகரித்து வைக்கும் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு அவரை தாக்கியது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அருகில் உள்ளவர்கள் அவரை அந்த தொட்டியில் இருந்து மீட்க உள்ளே …

Read More »

ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் பிரித்தானியா தூதரக அதிகாரிகளுக்கும் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கைக்கான பிரித்தானியா தூதரக அதிகாரிகளுக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்றது. போர் ஓய்வுக்குக்கு பின்னர் தற்போதைய விடுதலைப்புலிகளதும் அதன் போராளிகளது அரசியல் பொருளாதாரசெயற்பாடுகள் தொடர்பிலும். தாயகஅரசியல் பரப்பில் போராளிகளது பங்குபற்றுதலும் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. போரில் நேரடியாக பங்குபற்றியவர்கள் புனர்வாழ்வின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட முடியுமானால் அதே போன்று போர்சூழலில் பலதரப்பட்ட காரணங்களுக்காகவும் காரணமின்றியும் நெடுநாட்கள் சிறையில் வாடும் அரசியல்கைதிகள் எவ்விதமானதொரு …

Read More »