Tag: அரசாங்கம்

அவசரகாலச் சட்டத்தை தொடரும் எண்ணத்தில் அரசாங்கம்

அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார கருத்து வெளியிட்டிருந்தார். ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பாதுகாப்புச் சபைக் கூடி பாதுகாப்பு நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னர் அவசரகாலச் சட்டம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் மத்துமபண்டார குறிப்பிட்டிருந்தார். அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டை ஆட்சி செய்யும் […]

ஜனாதிபதி

இன்று மாலை ஜனாதிபதியுடன் பலதரப்பு பேச்சு

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். இதன் பிரகாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன் உட்பட பலர் இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று […]

ஊழல்களை மறைக்கவே ராஜபக்சர்கள் தொழிற்சங்கங்களை தூண்டி விடுகின்றனர்

கடந்த அரசாங்க காலப்பகுதியில் ஊழல் முறைகேடு மோசடிகளில் ஈடுபட்டோரின் விசாரணைகள் முடிவடைந்துள்ளது. இவர்களை தற்பொழுது கைதுசெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடும் எரிபொருள் ஊழியர்கள் தொடர்பில் செய்தியாளர் ஒருவர் கேட்ட […]

பல்கேரியாவிலிருந்து 32 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

சட்டவிரோதமாக பல்கேரியாவில் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு அனுப்பிவைப்பதாக கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்ட குறித்த பிரஜைகள் துருக்கியில் நிர்க்கதியாக்கப்பட்டு, பின்னர் பல்கேரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளர். இந்நிலையில், குறித்த பிரஜைகளை அந்நாட்டு அரசாங்கம் நாடு கடத்தி சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகிறது – பிரதமர்

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகிறது – பிரதமர் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் ஏற்படுவதற்கு இடமளிக்காத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதே வேளை நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுவதாகவும் பிரதமர் கூறினார். பிரதமர் காலியில் நெலும் ஹப்பிட்டிய ரிதிதரு இளைஞர்களினால் […]