தேர்தல் முறைமை திருத்தத்தில் அரசாங்கம் மிக அவதானமாக கையாள வேண்டும்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
தேர்தல் முறைமை திருத்தத்தில் அரசாங்கம் மிக அவதானமாக கையாள வேண்டும்

உத்தேச தேர்தல் முறைமை சீர்திருத்தத்தில் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பதற்கான சரத்துக்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.

தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமை இணைந்த தேர்தல் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டாலும், விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் கிடைக்கப்பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய அச்ச நிலைமை சிறுபான்மையினர் மத்தியில் உள்ளதை உணரக்கூடியதாக உள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தேச தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமை இணைந்ததான தேர்தல் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டாலும், விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் கிடைக்கப்பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய அச்ச நிலைமை சிறுபான்மையினர் மத்தியில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலப்பு தேர்தல் முறைமையின் ஊடாக தேர்தல் நடத்தப்பட்டாலும், அங்கு தொகுதிவாரியான தேர்தல் முறைமைக்கு அமைய அதிக ஆசனங்கள் வழங்கப்படும் பட்சத்தில் பெரும்பான்மையினரின் பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் ஒவ்வொரு பிரஜையினதும் வாக்குரிமை முக்கியமானது என்பதுடன் அனைவரினதும் அரசியல் உரிமைக்கும் உரிய பெறுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள மக்களை திருப்திப்படுத்துவதன் ஊடாக ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்துக்கும் நியாயமான தேர்தல் முறைமையொன்றை உருவாக்கியதாக அர்த்தம் கற்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முறைமைத் திருத்ததில் அரசாங்கம் இந்த விடயங்ளை மிக அவதானமாக கையாள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர்,

தேர்தல் முறைமைத் திருத்தம் என்பது ஒரு சமூகத்தின் எதிர்கால அரசியல் இருப்பை தீர்மானிக்கும் விடயம் என்பதால் இதனை எந்வொரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்குவதன் ஊடாக நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மையினரின் நல்லெண்ணத்தை வென்றெடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

பெரும்பான்மையினரின் பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினரின் விகிதத்திற்கு ஏற்ப வெட்டுப்புள்ளிகள் குறைக்கப்பட்டு, சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்படாத வகையிலான தேர்தல் முறைமையொன்றை உருவாக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites