சாவகச்சேரியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கு வயல் பகுதி ஒன்றிலிருந்து குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியின் பெறுமதி இரண்டு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து 7.30 மணியளவில் குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை […]
Other News
வட.கிழக்கு பட்டதாரிகளின் போராட்டம் முடிவின்றி தொடர்கிறது
வட.கிழக்கு பட்டதாரிகளின் போராட்டம் முடிவின்றி தொடர்கிறது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து தம்மை கல்வி கற்க வைத்த பெற்றோர் இன்று தாம் வேலைவாய்ப்பு இல்லாமல் நடு வீதிகளில் நின்று போராடுவதை எண்ணி வேதனை அடைவதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கல்விகற்ற தாம் இன்று தொழில்வாய்ப்பை பெறமுடியாமல் பலரின் ஏழனத்திற்கு உள்ளவாது வேதனையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் […]
வாழைச்சேனை வைத்தியசாலை சுற்றி மதில் அமைக்க 10 மில்லியன் ஒதுக்கீடு: கிழக்கு முதலமைச்சர்
வாழைச்சேனை வைத்தியசாலை சுற்றி மதில் அமைக்க 10 மில்லியன் ஒதுக்கீடு: கிழக்கு முதலமைச்சர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலுள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சுற்றுமதில் அமைக்க 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைக் கொண்டு சுமார் 3500 அடி சுற்றுப்பரப்புக்கு சுற்று மதில் அமைக்கப்படவுள்ளது. […]
அர்ஜுன மகேந்திரனிடம் விசாரணை
அர்ஜுன மகேந்திரனிடம் விசாரணை இலங்கை மத்திய வங்கியில் பிணை, முறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம்இன்றைய தினம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த மோசடி சர்ச்சை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு இன்றைய தினம் சமூகமளிக்குமாறு கடந்த 8ஆம் திகதி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு ரணில் மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் […]
வலி வடக்கு காணிகளை விடுவியுங்கள் : விஜயரட்ணம் ரெட்ணராஜா
வலி வடக்கு காணிகளை விடுவியுங்கள் : விஜயரட்ணம் ரெட்ணராஜா யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை ஒரு மாதகாலத்திற்குள் விடுவிக்குமாறு காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் யாழ்பாண பிரஜைகள் குழுவின் தலைவருமான விஜயரட்ணம் ரெட்ணராஜா கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் காணிகளை விடுவிக்குமாறு கோரி சத்தியாக்கிர போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அவற்றை விடுவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். காங்கேசன் துறை, மயிலிட்டி, பலாலி, ஊரணி, […]
தரம் 13 வரை சகல மாணவர்களுக்கும் கட்டாயக்கல்வி – எரான் விக்ரமரட்ன
தரம் 13 வரை சகல மாணவர்களுக்கும் கட்டாயக்கல்வி – எரான் விக்ரமரட்ன நாட்டின் அனைத்து மாணவர்களும் தரம் 13 வரையில் கல்வி பயிலக்கூடிய வகையில் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி குறிப்பிட்டுள்ளார். மேலும் பாடசாலைகளில் 13 ஆண்டுகள் மாணவர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தி புதிய சட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், […]
ஏற்காட்டில் 2-வது நாளாக இடி-மின்னலுடன் பலத்த மழை
ஏற்காட்டில் 2-வது நாளாக இடி-மின்னலுடன் பலத்த மழை தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் இல்லாமல் மிகவும் வறட்சியுடன் காணப்படுகிறது. தமிழகத்தில் கோடைக்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. அவ்வப்போது வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 4 மற்றும் 5-ந் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் மழை பெய்தது. […]
மக்களுக்கான சிறந்த சேவை நீதிபதிகளின் தரத்திலேயே உள்ளது: பிரதம நீதியரசர்
மக்களுக்கான சிறந்த சேவை நீதிபதிகளின் தரத்திலேயே உள்ளது: பிரதம நீதியரசர் மக்களுக்கு உயர்ந்த சேவையை வழங்குவதற்கு நீதிபதிகள் உயர் தரத்தில் இருக்க வேண்டும் என பிரதம Def Justice piriyacatன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். புதிய பிரதம நீதியரசர் உச்ச நீதிமன்றில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ளும் நிகழ்விலேயே மேற்படி கூறியுள்ளார். மேலும் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது நீதிமன்றின் பிரதான கடமையாகும் என்பதுடன் சட்டத்தில் வழியில் எனது அர்ப்பணிப்புடனான சேவைகளை வழங்குவேன் எனவும் […]
மஹிந்தவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவோம் ரணில் திட்டவட்டம்
மஹிந்தவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவோம் ரணில் திட்டவட்டம் ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்காமல் தொடர்ந்தும் பலப்படுத்துவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம் பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீர திசாநாயக்கவால் எழுப்பப்பட்ட வினாவிற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பதிலளித்து கொண்டிருந்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆட்சியின்போது ஸ்ரீலங்காவின் […]
கால அவகாசம் ஐ.நாவின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுக்கிறது
கால அவகாசம் ஐ.நாவின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுக்கிறது ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஸ்ரீலங்காவிற்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்படுவது தற்போது உறுதியாகியுள்ள நிலையில், சர்வதேசத்தின் இந்த நகர்வானது ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுப்பதாக அமைந்திருப்பதாக தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் தொழிற் சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து ஐ.நா மனித உரிமை பேரவைக்கு போரினால் […]





