Other News

சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் – நாட்டுக்கு அர்ப்பணிப்பு

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. உலகளவில் சீனாவின் படை பலம் அபாரமானது. ஆண்டுதோறும் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்மூலம் ஆயுதக்குவிப்பிலும் ஈடுபட்டுள்ளது. சீனாவிடம் ‘சி.என்.எஸ். லயனிங்’ என்ற விமானம்தாங்கி போர்க்கப்பல் மட்டும் இருந்து வந்தது. அதுவும் கூட மிகப்பழையது. 25 ஆண்டுகளுக்கு முந்தையது. பழைய சோவித் […]

தென் கொரியாவில் அமெரிக்கா கவச ஆயுதங்களை நிறுவியதற்கு சீனா கடும் எதிர்ப்பு

அமெரிக்கா தென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவியதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வடகொரியா நாடு தனது பக்கத்து நாடான தென் கொரியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது. வட கொரியாவின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதலை நடத்த போவதாக அறிவித்துள்ளார். அவருடைய மிரட்டல் காரணமாக […]

வங்காளதேசத்தில் 560 மசூதிகளை கட்டும் சவுதி அரேபியா: ரூ.6 ஆயிரம் கோடி செலவிடுகிறது

வங்காளதேசத்தில் 560 மசூதிகளை கட்டும் சவுதி அரேபியா இதற்காக ரூ.6 ஆயிரம் கோடி செலவிடுவதாக வங்க தேச திட்ட மந்திரி முஸ்தபா கமால் தெரிவித்துள்ளார். வங்காள தேச அதிபர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சவுதி அரேபிய மன்னரை சந்தித்த அவர், வங்காள தேசத்தில் பல்வேறு இடங்களில் மசூதி கட்டுவதற்கு சவுதி அரேபியா உதவ வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதை ஏற்றுக் […]

பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்தால் மக்களின் மனநிலை உக்கிரமடையும்: சி.வி.

பொறுப்புக்கூறலை தட்டிக் கழித்து வருவதால் மக்களின் மனவருத்தங்கள் மேலும் உக்கிரமடையும் என்பதற்கு வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் ஒரு சிறந்த உதாரணமாகும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரது உறவுகளின் வடக்கு- கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வெளியிடும் வகையில் வட. மாகாண சபையில் முதலமைச்சர் இன்று (வியாழக்கிழமை) ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த […]

இந்தியாவிலிருந்து 46 அகதிகள் தாயகம் திரும்பினர்

இந்தியாவின் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 46 பேர் இன்று (வியாழக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலக வசதிப்படுத்தலுடன், குறித்த அகதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து முகாம்களில் வாழ்ந்துவந்த கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா ஆகிய […]

ஜீ.எஸ்.பி. இலங்கைக்கு மீண்டும் கிடைக்குமா? – இன்று வாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வரிச்சலுகையான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில், மிக மோசமான மனித உரிமை மீறல்களால் இழந்த இவ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களை சந்தித்து அரசாங்கம் மேற்கொண்டுவரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்து தெளிவூட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் […]

தீவிரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

தெற்காசிய பிராந்திய வலயத்தில் ஏற்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியமாகும் என இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் இடையே டெல்லியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய […]

மத்திய மாகாணத்தில் பொலித்தீன் பாவனைக்கு தடை

மத்திய மாகாணத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்வது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால்,பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டி மாவட்டத்தில் நிலத்தடி நீர் தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே மத்திய மாகாண […]

வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம்

சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உலகத் தரம்வாய்ந்த வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நடத்திய பேச்சுக்களின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுக்களின் போது, மூன்று பிரதான வீதி அமைப்புகளை அபிவிருத்தி செய்து தருமாறு […]

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போலவே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்கி […]